இருபான் ஹாஹா ஓஹோ என்று புகழ்ந்த ஹோட்டலில் கிலோ கணக்கில் அழுகிய இறால், கெட்டுப்போன கறி, பூட்டு போடபட்ட அதிகாரிகள்.

0
587
Irfan
- Advertisement -

பிரபல யூடுயூப் உணவு விமர்சகர் இர்பான் ஹாஹா ஓஹோ என்று புகழ்ந்து ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரங்கள் சீல் வைத்து இருக்கும் நிலையில் அந்த ஹோட்டல் குறித்து இர்பான் வெளியிட்ட Review வீடியோவை மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார். மேலும், இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகள் உள்ள காட்ஸ்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது. ஒருமுறை விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற உலகநாயகன் கமலஹாசன் கூட இர்பானின் யூடியூப் வீடியோக்களை ரசித்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சூர்யா இந்தியன் இல்லையா ? இந்தியில் ஷாருக்கான் சொன்னதை தமிழில் சூர்யா ஏன் சொல்லவில்லை – காயத்ரி ரகுராம் கண்டனம்.

Reviewக்கு லட்சங்களை வாங்கும் இர்பான் :

அதுமட்டும் இல்லாமல் இவர் சாப்பிடுவதை பார்த்தால் எனக்கே பொறாமையாக இருக்கும் என்றெல்லாம் பாராட்டி இருந்தார். அந்த அளவிற்கு மிகப் பிரபலமான நபராக திகழ்கிறார் இர்பான். இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று பல ஹோட்டல்களில் சாப்பிட்டு Review போட்டு வருகிறார். இதற்கு பல லட்சங்களை சம்பளமாக வாங்கிகிறார். ஆனால், இவர் புகழ்ந்து தள்ளி பல ஹோட்டல்களின் தரம் சரியில்லை என்று புகார் கூட எழுந்தது.

-விளம்பரம்-

ரோஸ் வாட்டர் ஓட்டலில் ரெய்டு :

இப்படி ஒரு நிலையில் இவர் சாப்பிட்டு ஹாஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளிய ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சிகள் பரிமாறப்பபட்டு இருந்ததால் உணவு துறை அதிகாரிகள் சீல் வைத்து இருக்கின்றனர். சென்னை அண்ணா நகரில் ரோஸ் வாட்டர் என்ற உணவகம் ஒன்று சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திற்கு பல youtube விமர்சகர்கள் சென்று தங்களின்reviewவை கொடுத்து இருக்கிறார்கள்.

அதிகாரிகள் விட்ட டோஸ் :

அந்த வகையில் இர்ஃபான் கூட கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டு அங்கு இருந்த உணவுகள் அனைத்தும் தரமாக இருப்பதாக கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த உணவகத்தில் பரிமாறப்பட்ட இறால் வகை உணவுகள் கெட்டுப் போய் இருந்ததாக வந்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர்.அதில் இந்த உணவகத்தை பற்றிய பல அதிர்ச்சியான விஷயங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த உணவகத்தில் உணவு தயாரிக்கப்படும் இடம், இறைச்சி பதப்படுத்தப்படும் இயந்திரங்கள் போன்ற அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் பராமரிப்பின்றி இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் அங்கு இருந்த ஹோட்டல் ஊழியர்களை லெப்ட் ரைட் வாங்கியதோடு இதையெல்லாம் நீங்கள் சாப்பிடுவீர்களா என்று கேள்வியையும் எழுப்பினார்கள்.

இர்பான் வீடியோவை கழுவி ஊற்றும் ரசிகர்கள் :

மேலும் மக்களின் ஆரோக்கியத்தை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் விமர்சனம் என்ற பெயரில் சிலர் காசுக்காக செய்யும் விஷயங்களையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். மேலும் அதிகாரிகள் நடத்திய அந்த ஆய்வில் அந்த ஹோட்டலில் கெட்டுப்போன 10 கிலோ இறால் 45 கிலோ சிக்கன் மட்டன் உள்ளிட்ட திருச்சிகளை கைப்பற்றி அதனை உணவு சோதனைக்கு அனுப்பி இருக்கிறார்கள். மேலும், இந்த ஆய்வு முடியும் வரை ஹோட்டலை நடத்தக் கூடாது என்று அந்த உணவகத்தை மூடி அதிகாரிகள் பூட்டு போட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரல் ஆனதை தொடர்ந்து இந்த ஹோட்டலில் சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று உகந்த இர்பானின் அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலரும் இர்பானை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Advertisement