அரசியல் வாரிசு கனிமொழி குறித்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து வருகிறார். இவர் முதன் முதலில் தனுஷை வைத்து 3 என்ற படத்தை இயக்கி இருந்தார்.

முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதை தொடர்ந்து இவர் வைராஜா வை என்ற படத்தை இயக்கி இருந்தார். அதன் பின் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் லால் சலாம். இந்த படத்தில் ரஜினி அவர்கள் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய ரோலில் நடித்து இருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது.
ஐஸ்வர்யா- தனுஷ்:
இதற்கிடையில் ஐஸ்வர்யாவிற்கும் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருந்தது ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தது. 18 ஆண்டுகால திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் பேரிடி தான்.

ஐஸ்வர்யா- தனுஷ் விவாகரத்து:
அதுமட்டுமில்லாமல் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு இரண்டு ஆண்டுகளாக கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் கூடிய விரைவிலேயே தீர்ப்பு அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய அரசியல் வாரிசு நண்பர் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அதாவது, மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி. கனிமொழியின் அரசியல் பயணத்தை கொண்டாடும் வகையில் பிரபல சேனல் ஒன்று பேட்டி ஒன்று எடுத்திருந்தது. அதில் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டிருந்தார்.

ஐஸ்வர்யா பேட்டி:
அதில் அவர், பொதுவாக நான் எங்குமே போகமாட்டேன். நான் கனிமொழி அக்காவுக்காக எங்கு வேண்டுமானாலும் வந்து விடுவேன். எங்களுடையது 20 வருட நட்பு. எங்களுக்குள் விவரிக்க முடியா ஒரு உறவு இருக்கிறது. நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் முதலில் போன் பண்ணி அக்காவிடம் தான் பேசுவேன். அரசியல் மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவர் பேசியது எல்லாம் பார்த்து நிறைய முறை திட்டி இருக்கிறேன். இன்னும் நல்லா பேசணும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன்.
அதோட எனக்கு நட்பு வட்டாரம் கொஞ்சம் கம்மிதான். விரல்களை விட்டு எண்ணிவிடலாம்.
https://www.youtube.com/watch?v=-r20ZZ8ZpRU
கனிமொழி குறித்து சொன்னது:
அந்த நட்பு வட்டாரத்தில் ஒருவர் தான் கனிமொழி அக்கா. அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. இருந்தாலுமே, என்னுடைய கோவில் வழிகாட்டி அவர்கள் தான். நான் எந்த ஊருக்கு, எந்த கோவிலுக்கு போனாலும் அக்காவின் ஆளுங்க தான் என்னை பத்திரமாக கூட்டிட்டு போவார்கள். அக்கா என்னுடைய எந்த படமும் பார்த்ததில்லை. ஆனால், அவர்களுக்கு கமர்சியல் படங்கள் ரொம்ப பிடிக்கும். அவர் பார்க்கத்தான் சீரிஸான ஆள் மாதிரி இருப்பார். அவங்க சிரிச்சா அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், சிரிக்க மாட்டார். அவர் எப்போதுமே சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.






