‘என்ன ஏமாத்திட்டான் ‘ நான்கு வருடங்கள் காதலித்த தன் காதலர் மீது போலீசில் புகார் அளித்த ஜூலி

0
384
julie
- Advertisement -

நான்கு வருடங்கள் காதலித்து தன்னுடைய காதலர் மீது வைத்துள்ள ஜூலி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் சர்சைக்குரிய நபராகவும், மிகவும் வெறுக்கப்ட்ட நபராகவும் இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் “வீர தமிழச்சி” என்ற  நல்ல பெயரை எடுத்த ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் என்ன செய்தாலும் இவரை கலாய்ப்பதற்கேன்றே ஒரு கூட்டம் சமூக வலைத்தளத்தில் உருவானது.

-விளம்பரம்-

இருப்பினும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சினிமா என்று பிஸியாக இருந்து வருகிறார் இப்படி ஒரு நிலையில் நான்கு வருடங்கள் காதலித்த தன்னுடைய காதலர் மீது ஜூலி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அமைந்தகரை அய்யாவூ காலனி பகுதியை சேர்ந்த ‘மனிஷ்’என்ற 26 வயதுடைய நபர் அண்ணாநகரில் உள்ள தனியார் சலூன் கடையில் பணியாற்றி வருவதாகவும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அவர் மீது காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்ததாகவும் ஜூலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தன்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து தன்னிடம் இருந்து இருசக்கர வாகனம், 16 கிராம் தங்க செயின், ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பலவற்றை மனிஷ் வாங்கியுள்ளார் என்றும் எது வரை அவருக்காக 2.30 லட்சம் செலவு செய்து இருப்பதாகவும் ஜூலி தன்னுடைய புகாரில் தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மதத்தை காரணம் காட்டி பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்று காதலை முறித்துக் கொண்டதாக ஜூலி தெரிவித்ததாகவும், ஆனாலும் தொடர்ந்து மனிஷ் தன்னிடம் பணம் பறிக்கும் வகையில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் இதனால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு இருப்பதாகவும் ஜூலி தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement