தூக்கம் கூட வரவில்லை. சுஜித் குறித்த முதன் முறையாக கூறியுள்ள அஜித்.

0
27481
ajith-sujith
- Advertisement -

சுர்ஜித்தின் மரணம் தமிழகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையும் பதற வைத்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 4 நாட்களாக நிகழ்ந்தது. ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் தான் சிக்கினான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்றது குழந்தை. ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்க அரசாங்கமும்,மக்களும் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்கள். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய் முடிந்தது. ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளும் பரபரப்பாக செய்தார்கள்.

-விளம்பரம்-
sujith

அதனை தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் போன்ற 10 அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டி சுரங்கம் போல் செய்து கொண்டு வந்தார்கள். ஆனால், ஆழ்துளை கிணறு பகுதியில் குழி தோண்டி செல்லும்போது அங்கு பாறைகள் அதிகமாக இருப்பதால் சுரங்கப் பாதையை ஏற்படுத்துவதில் கொஞ்சம் தாமதமானது. மேலும், குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று மக்களும், அரசாங்கமும் பல போராடங்களை சந்தித்து வந்தார்கள். இவ்வளவு முயற்சிகள் செய்தும், நான்கு நாட்களை கடந்தும் சுர்ஜித்தை உயிருடன் வெளியே எடுக்க முடியவில்லை. மேலும், சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் தான் வெளியே எடுக்கப்பட்டது என தெரியவந்தது. சுர்ஜித்தின் இந்த கோர சம்பவத்திற்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவே சோகத்தில் மூழ்கி உள்ளது. அதோடு அந்த பகுதி மக்கள் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள மக்களும் சுர்ஜித் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும்,சமூக வலைத்தளங்களில் சுர்ஜித் இழப்பிற்கு சினிமா பிரபலங்களும்,மக்களும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : அட கடவுளே, காதல் மன்னன் பட நடிகையா இது. என்ன இப்படி ஆகிட்டாரு.

- Advertisement -

சுர்ஜித்தின் அநியாயமான மரணத்தைக் குறித்து தல அஜித் மிகுந்த வேதனையுடன் தன்னுடைய கருத்துக்களை கொட்டித் தீர்த்தார். மேலும், இந்த கோர சம்பவம் குறித்து அஜித் அவர்கள் கூறியது, ஆழ்துளை கிணற்றில் சுர்ஜித் விழுந்த செய்தி கேள்விப்பட்டதுமே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் முதல் நாளே சுர்ஜித்தை எப்படியாவது மீட்டு விடுவார்கள் என நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், மூன்று நாட்கள் கழிந்தும் சுர்ஜித் உயிர் உடன் வெளியே எடுக்காமல் இருந்தது ரொம்ப வருத்தமான செய்தி. மேலும்,சுர்ஜித் நினைத்து எனக்கு இரண்டு நாட்கள் தூக்கவே வரவில்லை. மேலும்,சுர்ஜித் அந்த ஆழ்துளை கிணற்றில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான். எந்த ஒரு மனநிலையில் இருந்திருப்பான். அதுவும் இரண்டு வயது பக்குவமே இல்லாத குழந்தை சாப்பாடு, தண்ணி இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பான்.

sujith

சுர்ஜித் மரணத்தை தொடர்ந்து இந்த உலகில் எந்த சம்பவம் நிகழக்கூடாது. இப்போது என்ன தான் தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு போனாலும் இந்த மாதிரி சின்ன சின்ன விஷயத்தில் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கவில்லை. மேலும், சுர்ஜித் 30 அடி ஆழத்தில் விழுந்த போதே காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. சுர்ஜித் மரணம் குறித்து எங்கள் வீட்டில் அனைவரும் சுர்ஜித்க்காக பிராத்தனை செய்து வருகிறோம். மேலும், இது தான் இந்த உலகத்தில் கடைசி சம்பவமாக இருக்கும் என்றும் அரசாங்கம் இதற்காக தீவிரமாக நடவடிக்கை எடுத்து மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும். மேலும், இவ்வாறு அலட்சியமாக ஆழ்துளை கிணற்றை மூடாமல் இருக்கும் நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இனி ஒரு போதும் இந்த உலகில் எந்த மூலையிலும் இதுபோன்று கொடுமையான சம்பவம் நிகழக்கூடாது என்று தல அஜித் மனவேதனையுடனும், ஆவேசத்துடனும் பேசினார்.

-விளம்பரம்-
Advertisement