பிரபல நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் அஜித்குமார் திடீரென்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த தகவலை கேட்டதும் அவருடைய ரசிகர்கள் பலருமே பதறி போய் விட்டார்கள். பின் விசாரித்த போது தான் அஜித் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட வயதிற்கு மேலானவர்கள் முழு உடல் பரிசோதனை மற்றும் வழக்கமான பரிசோதனை செய்வது வழக்கம் தான். உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
முழு உடல் பரிசோதனை என்பது ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, கண் பரிசோதனை, சரும பரிசோதனை, பாலியல் தொடர்பான சோதனை உள்ளிட்ட பல பரிசோதனைகள் இருக்கிறது. அதோடு குடும்பத்தில் ஏதேனும் மரபியல் நோய் குறித்து விசாரிக்கப்படுவார்கள். இதனால் தற்போது நடிகர் அஜித்குமாருக்கு 52 வயதாகிறது. 50 வயதுக்கு மேல் ஆனாலே முழு உடல் பரிசோதனை செய்வார்கள். இதனால் தான் அஜித்தும் பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இதை தெரிந்தவுடன் ரசிகர்கள் நிம்மதி ஆகி இருக்கிறது.
அஜித் திரைப்பயணம்:
கடைசியாக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.
விடாமுயற்சி படம்:
அதன் பின் அஜித்தின் இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைக்கிறார். இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
படம் குறித்த தகவல்:
தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய படப்பிடிப்பு அதிகம் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று இருக்கிறது. படத்தில் பயங்கரமான ஸ்டண்ட் காட்சிகளும், சேசிங் சீன்களும் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அஜித் அடிக்கடி பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார்.