சமூகத்த சீரழிக்கிறவன் ஒரு நல்ல இயக்குனரா இருக்க முடியாது – கவுண்டம்பாளையம் விழாவில் கொந்தளித்த பேரரசு.

0
277
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். அதோடு இவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் கூட நடித்து இருக்கிறார். இறுதியாக இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன் நடித்த அதிபர் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

-விளம்பரம்-

மேலும், சிறிய இடைவெளிக்கு பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘செந்தூரப்பூவே’ தொடர் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பழனிச்சாமி என்ற ரோலில் கலக்கி வருகிறார். இவருடைய ரோல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

குழந்தை C/O கவுண்டம் பாளையம் படம்:

தற்போது நடிகர் ரஞ்சித் அவர்கள் இயக்கி நடித்திருக்கும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். இந்த படத்தை ஸ்ரீ பாசத்தாய் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, சௌந்தர், ஷாஜி பழனிசாமி உட்பட பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் நாடக காதலை குறித்த கதை. பெண் பிள்ளைகளை பெற்றவர்களின் வலியை காண்பிக்கும் படம்.

பேரரசு பேட்டி:

சமத்துவ, சமூக நீதிப் பேசும் படம். கொங்கு மக்களின் கலாச்சாரத்தை காட்டும் படம். இந்தப் படத்தை நானே எழுதி, இயக்கி, நடித்திருக்கிறேன். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உட்பட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, நடிகர் ரஞ்சித்தை வைத்து படம் எடுத்த இயக்குனர்கள் பல பேர் இங்கு வந்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

ரஞ்சித் குறித்து சொன்னது:

எல்லோருமே வந்ததற்கு காரணம் நட்புதான். அதுமட்டுமில்லாமல் நன்றியுடன் இருக்கிறார்கள். அந்த நன்றி இப்போது இருக்கும் சினிமாவில் இல்லை. எந்த ஒரு நடிகர் தன்னை உருவாக்கிய இயக்குனரை மதிக்கிறாரோ அவர் தான் நல்ல நடிகர். இல்லை என்றால் அவர் வெறும்சம்பாதிக்கும் நடிகர் தான். இப்போது இருக்கும் சமூகத்தில் நிறைய சீர்கேடுகள் நடக்கிறது. அதை சீர்திருத்துவதற்கான படங்கள் எடுத்தால் அவர்கள் தான் பொறுப்பான படைப்பாளி. எப்போதும் நடந்த கதையை இப்போது எடுத்து புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பினால் அவர் எல்லாம் படைப்பாளி கிடையாது.

கவுண்டபாளையம் படம் குறித்து சொன்னது:

இந்த கவுண்டபாளையம் படம் ஒரு ஜாதிக்குள் அடங்கி கிடக்கும் படம் கிடையாது. இந்த தலைமுறைக்கான படம். நம்ம வீட்டுப் பெண்ணை ஒருவன் சீரழித்தால் என்ன கோபம் வரும்? அந்த கோபத்தை தான் இந்த படத்தில் ரஞ்சித் காட்டியிருக்கிறார். இந்த படம் மனித ஜாதிக்கான படம். இதை நாடக காதல் என்று சொன்னால் ஏன் ஜாதி முத்திரை குத்துறீங்க? ஒரு பெண்ணை சீரழிப்பதும் நாடகக் காதலும் ஒன்றுதான். எந்த ஜாதி காரனாக இருந்தாலும் அவன் ஒரு பெண்ணை ஏமாற்றினான் என்றால் அவன் மனுஷ ஜாதியே கிடையாது. அவன் ஒரு மிருகம். ஒரு அநியாயத்தை தட்டி கேட்க எந்த ஜாதியும் தேவையில்லை. அவனை வெட்டி கொள்ளணும். அவர் தான் இந்த சமூகத்திற்கு தேவையான இயக்குனர் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.

Advertisement