முதல் நாளே படு மொக்கை வாங்கிய நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் – வடிவேலு மீம்ஸை வைத்தே வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
754
Naai
- Advertisement -

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை பார்த்து ரசிகர்கள் வடிவேலு உடைய மீம்ஸ்களை வைத்து அவரை
கிண்டல் செய்யும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனாக திகழ்பவர் வடிவேலு. இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் பின்னணி பாடகரும் ஆவார். 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கிய திரைப்படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சத்யராஜ், பிரபு, விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்திலும் நடித்து இருக்கிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இந்த படத்தை சுராஜ் இயக்கி இருக்கிறார். லைகா புரோடக்சன் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

நாய் சேகர் ரிட்டன்ஸ் படம்:

மேலும், இவர்களுடன் இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ் காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். படத்தில் கடத்தல் காரர்களாக ஆனந்த்ராஜ், வடிவேலு இருக்கிறார்கள். தாஸ் என்ற ஆனந்தராஜ் பெண்களை கடத்துகிறார். நாய் சேகர் என்ற வடிவேலு பணத்திற்காக விலை உயர்ந்த நாய்களை கடத்துகிறார்.

படத்தின் கதை:

பின் ஆனந்த் ராஜுக்கு பிடித்த நாயை வடிவேலு கடத்துகிறார். இதனால் இருவருக்குமே பிரச்சனை ஏற்படுகிறது. இதனை அடுத்து தன் குடும்பத்தின் கடந்த காலம், அவர்களுக்கு ராசியான நாய் கடத்தப்பட்டது குறித்து வடிவேலுக்கு தெரிய வருகிறது. இவர்களுடைய நாய் ஹைதராபாத்தில் இருக்கும் பெரும்புளியான மேக்சி இடம் இருக்கிறது. இதை மீட்க வடிவேலு முயற்சிக்கிறார். இந்த முயற்சியில் வடிவேலு வெற்றி பெற்றாரா? இல்லையா? ஆனந்தராஜுக்கும் வடிவேலுக்கும் இடையே இருந்த பிரச்சனை சுமூகமானதா? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

படம் குறித்த விமர்சனம்:

படம் வெளியான சிறிது நேரத்திலேயே படம் குறித்து பலரும் நல்ல விதமாகத்தான் கூறி வந்தார்கள். படம் பார்த்த ரசிகர்கள், பழைய வடிவேலு மீண்டும் வந்து விட்டார். இந்த படத்திற்கு வடிவேலு தான் தூணாக இருக்கிறார். நாய் சேகர் படம் காமெடியாக, குடும்பத்துடன் பார்க்கும் படமாகவும், குழந்தைகளும் பார்க்கும் படமாகவும் இருக்கிறது என்றெல்லாம் பாசிட்டிவான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்கள். ஆனால், அதற்குப் பின்பு நெகட்டிவ் விமர்சனங்கள் படம் குறித்து எழுதி வருகின்றது.

படம் குறித்த நெகட்டிவ் விமர்சனம்:

படம் மொக்கையாக இருக்கிறது. வடிவேலுவின் பிரபலமான காமெடி காட்சிகளை மீம்ஸ்களின் டெம்ப்லேட்டாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். வடிவேலு படத்திற்கு அவருடைய டெம்ப்ளேட்டை பயன்படுத்திபயங்கரமாக ட்ரோல் செய்து இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்தை மோசமாக விமர்சித்த வடிவேலுவின் வீடியோவை பகிர்ந்த்து எண்ணம் போல் வாழ்வு என்று கமன்ட் போட்டு வருகின்றனர்.

Advertisement