இந்த தீபாவளி தளபதி தீபாவளி என்றால் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் தல பொங்கல் என்று ரசிகர்கள் “விஸ்வாசம் ” படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இயக்குனர் சிவா இயத்தில் உறவாகி வரும் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.
படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. தற்போது படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் நடிகர் அஜித் இந்த படத்தின் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் ஏ வி எம் ஸ்டூடியோ ஒன்றிற்கு சென்றுள்ளார் அஜித். அஜித்தின் வருகையை அறிந்த ரசிகர்கள் டப்பிங் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளனர்.
அஜித்தை காண இரவு முதலே ரசிகர்கள் ஸ்டூடியோவிற்கு வெளியே அஜித்தை காண கா த்திருந்துள்ளனர். காலை முதல் இரவு வரை ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற விடயம் அஜித்தின் காதுக்கு செல்ல ரசிகர்களிடம் இப்படியெல்லாம் காத்துக்கொண்டிருக்காதீர்கள் என்று அன்பாக கண்டித்து அனுப்பி வைத்துள்ளார் நடிகர் அஜித்.