மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றும் தல அஜித்..! தல தல தான்.?

0
703
Ajith
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அஜித் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது. தற்போது அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் யார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

- Advertisement -

நடிகர் அஜித் மற்றும் ஸ்ரீதேவி மிகவும் நெருங்கிய நண்பர்கலாக இருந்து வந்தனர். நடிகை ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதால் தான் அஜித் அவர்கள் ஸ்ரீதேவி நடித்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்நிலையில் நடிகர் அஜித்துடன் நடிக்கப்போகும் நடிகை ஸ்ரீதேவி, நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்; என்று நடிகர் அஜித்திடம் கூறியிருந்தாராம்.

ஆனால், அஜித்துடன் இணைந்து நடிப்பதற்கு முன்பாகவே நடிகை ஸ்ரீதேவி இறந்துவிட்டார். இருப்பினும். அஜித் அவர்கள் ஸ்ரீதேவி குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர் என்பதாலும் மேலும், தற்போது ஸ்ரீதேவி குடும்பம் கொஞ்சம் பண நெருக்கடியில் இருப்பதாலும் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ள படத்தில் அஜித் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியகியது.

-விளம்பரம்-

தற்போது இந்த தகவல் உர்ஜிதமாகியுள்ள நிலையில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடிகர் அஜித், இயக்குனர் வினோத் குமாருக்கு இரண்டு முறை போனில் தொடர்புகொண்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுளளது.இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி மதம் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Ajith-Next-To-Be-Bankrolled-By-Boney-Kapoor_SECVPF

இயக்குனர் வினோத் குமர் , நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘தீரன் அத்யாயம் 1 ‘ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தீரன் படத்தை போன்றே அஜித்தை வைத்து எடுக்கப்போகும் படமும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

Advertisement