ஜீ விருது விழாவில் விருதுகளை அள்ளிக்குவித்த அஜித் குழு. லிஸ்டில் வராத விஜய்.

0
12809
viswasam
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் அவர்கள் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். மேலும், இவரை ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்றும் திரை உலகம் அல்டிமேட் ஸ்டார் என்றும் தான் அழைப்பார்கள். அதோடு நடிகர் அஜித்துக்கு என ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர். ஜீ தொலைக்காட்சி நிறுவனம் சார்பாக விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

இந்த விருது வழங்கும் விழாவில் பல பிரபலங்கள் விருதுகளை வாங்கினார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருக்கும் தல அஜித் அவர்கள் நடித்த படத்துக்கு பல விருதுகள் வழங்கப்பட்டது. இந்த வருடம் அஜித் நடிப்பில் வெளி வந்த படம் “விசுவாசம்,நேர்கொண்டபார்வை”. இந்த இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் அளவுக்கு வெற்றி அடைந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.

இதையும் பாருங்க : கோடியில் லாஸ் என்று புகார் அளித்த தயாரிப்பாளர். அதர்வா பிரச்சனையில் புதிய திருப்பம்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடந்த ஜீ தொலைக்காட்சியில் விருது வழங்கும் விழாவில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. அஜித்தின் விசுவாசம் படம் சிறந்த பாடகர், பாடலாசிரியர், பேவரட் படம், பேவரட் இசையமைப்பாளர், பேவரட் ஹீரோயின் போன்ற பல விருதுகளை அள்ளியது. அதுமட்டும் இல்லாமல் தல அஜித் அவர்கள் பேவரட் நடிகர் என்ற விருதையும் தட்டிச் சென்றார். மேலும், இந்த விருதில் தளபதி விஜய்யின் பிகில் படம் ஸ்டில் ஒன்று கூட வரவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் எல்லோரும் பயங்கரமாக கொண்டாடி வருகிறார்கள். விசுவாசம் படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழியில் கூட மாஸ் வெற்றி கொடுத்து உள்ளது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று உள்ளது. அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமை படத்திலும் பணியாற்றுகிறார்கள் என தெரிய வந்து உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் உள்ளனர். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகியும், பிற நடிகர்கள் குறித்தும் எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். மேலும், இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளிவர உள்ளது.

-விளம்பரம்-
Advertisement