அஜித்துக்கு இருக்கும் பொறுப்பு விஜய்க்கு ஏன் இல்ல.! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

0
696
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் என்ற இரு மாபெரும் நட்சத்திரங்களுக்கு அடுத்தபடியாக இருப்பது தல மற்றும் தளபதி தான் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் உள்ள ரசிகர்கள் பட்டாளம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இவர்கள் செய்யும் சிறு செயல்கள் கூட ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது.

-விளம்பரம்-

அதேபோல இவர்களது ரசிகர்களும் இவர்கள் இருவரையும் இணைத்து பல்வேறு விடயங்களில் ஒப்பிட்டு வருகின்றனர். மேலும், தலயா தளபதியா என்று அடிக்கடி சமூகவலைதளத்தில் நிரூபித்துக் கொண்டு தான் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் விஜய்யை அஜித்துடன் ஒப்பிட்டு ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது அட்லி இயக்கத்திலும், நடிகர் அஜித் வினோத்குமார் இயக்கத்திலும் நடித்து வருகின்றனர். மேலும், அவ்வப்போது வெளியில் தென்படும் இவர்களை
ரசிகர்கள் புகைப்படம் எடுத்து அதனை வெளியிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரை ரசிகர்கள் பைக்கில் பின் தொடர்வது போல ஒரு வீடியோ ஒன்று வெளியானது.

அந்த வீடியோவில் நடிகர் விஜய் சீட் பெல்ட் அணியாமல் காருக்குள் அமர்ந்து இருக்கிறார். ஆனால் , இதேபோல ரசிகர் ஒருவர் அஜித்துடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை ஒப்பிட்டு அதில் அஜித் சீட் பெல்ட் அணிந்து உள்ளதையும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

-விளம்பரம்-
Advertisement