விஜய்யுடன் தேவா அஜித்துடன் வான்மதி போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சுவாதி. அந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெறவே தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் நடிகை ஸ்வாதி. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமிரின் 2009 ஆம் ஆண்டு வெர்லியான ‘யோகி’ படத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு அவர் கோலிவுட்டில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். . தற்போது, அவர் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறார். தமிழ் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளாராம். மேலும், நல்ல பாத்திரத்தில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இதையும் பாருங்க : விஜய் 63 யில் நடிக்கும் பிக் பாஸ் நடிகர்.! வெளியான புதிய தகவல்.!
இதுகுறித்து பேசிய அவர், இத்தனை ஆண்டுகள் கழித்தும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் என்னிடம் இப்போதும்’ நீங்கள் தமிழ் படத்தில் நடிக்கப் போகிறார்கள்? என்று கேள்வி கேட்கின்றனர். நான் வெளியில் மேக்கப் இல்லாமல் சென்றால் கூட என்னை அடையாளம் கண்டு கொண்டுவிடுகின்றனர். ஒரு சமயம் வெளியில் சென்றிருந்த போது ஒரு இளம் ஜோடிகள் என்னிடம் இதே கேள்வி கேட்டனர். அப்போது முடிவு செய்தேன் தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று.
என்னுடைய குடும்பம் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது நான் தமிழ் சினிமாவை பார்க்கும் போது அது தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறி இருந்தது. நான் சினிமாவை மிகவும் காதலிக்கிறேன், என்னுடைய ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நான் மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதாக இருக்கிறேன். நல்ல கதை அமைந்தால் நான் கண்டிப்பாக நடிக்க வருவேன்’ என்று கூறியுள்ளார். ஏற்கனவே இவர் தொலைக்காட்சிகளில் பணியாற்றி வருவதால் இவரை தமிழ் தொலைக்காட்சியிலும் எதிர்பார்க்கலாம் என்று எண்ணப்படுகிறது.