பைக் ரைடிங் கதை – டீசரை பார்த்துவிட்ட அஜித் கொடுத்த பாராட்டு – படக்குழு நெகிழ்ச்சி

0
627
ajith
- Advertisement -

சமீபத்தில் வெளியான தெலுங்கு படத்தின் டீசரை பார்த்து நடிகர் அஜித் பாராட்டியுள்ளதால் அந்த படத்தின் டீசரை அஜித் ரசிகர்கள் பலரும் தேடி பிடித்து பார்த்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் ஆந்திராவை சேர்நதவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்படி ஒரு நிலையில் காத்திருக்கும் நிலையில் தெலுங்கில் ‘இதே மா கதா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் டீசரைப் பார்த்த அஜித் பாராட்டு தெரிவித்திருக்கும் செய்தியை அந்தப் படத்தின் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

-விளம்பரம்-

அஜித் கூறியதாக ட்வீட் செய்துள்ள தயாரிப்பாளர் பாபு பதிவிட்டுள்ளதாவது, எனது நீண்ட கால நண்பர் ராம் பிரசாத் என்னிடம் இத்திரைப்படத்தின் டீசரை காட்டினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உண்மையிலேயே காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் எனக்கு பிடித்திருந்தது. எனக்கு பைக் ரைடிங் பிடிக்கும். அதனால் என்னை எளிதில் டீசருடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது. விரைவில் உங்களை தனிப்பட்ட முறையில் விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன்.படக்குழுவினர் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளாராம்.

- Advertisement -

குரு பவண் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சுமந்த் அஸ்வின், ஸ்ரீகாந்த், பூமிகா, தன்யா ஹோப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பைக் பயணத்தை கதைக்கருவாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது சினிமாவையும் தாண்டி நடிகர் அஜித்துக்கு பைக், ரேஸ் கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலும், இவர் சர்வதேச அளவில் பல்வேறு பார்முலா ரேஸ் பந்தயத்தில் கூட கலந்து கொண்டு இருக்கிறார். இவரது படங்கள் என்றாலே கண்டிப்பாக பைக் அல்லது கார் ஓட்டும் காட்சிகள் நிச்சயம் இடம் பெற்றுவிடும்.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார்.நடிகர் அஜித் குமார் அவர்கள் எப்போதும் தான் நடிக்கும் படங்களில் பைக் ஸ்டண்ட் மற்றும் சில சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். அதே போல இந்த படத்திலும் நடிகர் அஜித் பைக் ஸ்டன்ட் காட்சியில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement