தன்னுடன் நடித்த நடிகர் குறித்து மேனேஜரிடம் விசாரிக்கும் அஜித்.! யார் அவ்ளோ ஸ்பெஷல்.!

0
1221
- Advertisement -

நடிகர் அஜித்தின் எளிமை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. அதே தன்னுடன் பணியாற்றுபவர்களையும், ரசிகர்களையும் எப்போதும் மதிப்பாக கருதுவார் அஜித். அதனை நிரூபிக்கும் விதமாக இருக்கிறது இந்த ஒரு சம்பவம்.

-விளம்பரம்-
Arun-vijay

பொதுவாக தன்னுடன் பணியாற்றுபர்களை நடிகர் அஜித் மிகவும் மரியாதையுடன் நடத்துவர் என்று பல நடிகர்கள் கூறி கேள்வி பட்டிருக்கிறோம். அவ்வளவு ஏன் படபடிப்பில் தன்னுடன் பணியாற்றும் கலைஞசர்களுக்கு பிரியாணி கூட செய்துகொடுத்திருக்கிறார் அஜித்.

- Advertisement -

இந்நிலையில் தன்னுடன் நடித்த நடிகரை பற்றி அஜித், அவரது மேலாளர் மூலம் நலம் விசாரிப்பது உண்டாம். யார் அப்படி அஜித்துக்கு அவ்வளவு ஸ்பெஷலான நடிகர் என்று கேட்கிறீர்காளா வேறு யாரும் இல்லை நம்ம அருண் விஜய் தான். நடிகர் அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் வில்லனாக நடித்திருந்தார்.

அந்த படம் அருண் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. தற்போது அருண் விஜய் தடம் என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அருண் விஜய், அஜித்தை பற்றியும் கூறி இருந்தார். அப்போது அவருடன் நேரடியாக நான் பேசவில்லை என்றாலும் அஜித் அவர்கள் என்னை பற்றி அவருடைய மேனேஜரிடம் கேட்டுக் கொள்கிறார்.

-விளம்பரம்-

எனக்கும், அவருக்கும் இருக்கும் உறவு சந்தோஷமாக இருக்கிறது, நான் அவருடன் பணியாற்றும் போது அவர் என்னிடம் பல அறிவுரைகளையும், பல விடயங்களையும் பகிர்ந்து கொண்டார் அவர் சொன்னது அனைத்தும் எனக்கு இப்போதும் ஞாபம் இருக்கிறது. அதனை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Advertisement