ADMK நகர கவுன்சிலருடன் அஜித்குமார் பைக் ரைடு -இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்.

0
441
ajith
- Advertisement -

அதிமுக கவுன்சிலர் உடன் நடிகர் அஜித் பைக் ரைட் சென்றிருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், அஜித்தின் வலிமை படம் வசூலில் வாரி இறைத்து இருந்தது என்று இந்த படத்தின் தயாரிப்பாளரே அறிவித்து இருந்தார். தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏகே 61 படம்:

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இந்த கதையில் அஜித் மிகவும் இன்வால்வ் ஆகி இருப்பதால் அவரது லுக்கை அவரே டிசைன் செய்து இருக்கிறார். சமீபத்தில் அதற்கான புகைப்படங்கள் செய்து வெளியாகி இருந்தது. அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது.

ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு:

மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்றும், இந்த படத்திற்காக அவர் 20 முதல் 25 கிலோ வரை உடல் எடை குறைத்திருக்கிறார். தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி, விசாகப்பட்டினம், சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். சமீபத்தில் தான் அஜித் ஐரோப்பிய சுற்றுப்பயணம் முடிந்து இருந்தார். அதன் பிறகு திருச்சியில் நடந்த ரைபில் கிளப் துப்பாக்கி சூடு போட்டியில் பங்கேற்று இருந்தார்.

-விளம்பரம்-

அஜித்தின் லேட்டஸ்ட் பைக் ரைடு புகைப்படம்:

இந்நிலையில் தற்போது அஜித்தின் பைக் ரைட் புகைப்படம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, நடிகர் அஜித் அவர்கள் பொள்ளாச்சி நகராட்சி எட்டாவது வார்டு உறுப்பினர் அதிமுக கவுன்சிலர் வசந்த் உடன் பைக் ரைட் சென்றிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை தான் அதிமுக கவுன்சிலர் வசந்த் தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை ரசிகர்கள் பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

ஏகே 62 படம்:

மேலும், அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்படம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணி படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement