ஏகன் படத்தில் அஜித்துடன் நடித்த புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன் (ஆனா, படத்துல இந்த சீன் வரல)

0
905
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மாஸ். தல அஜித்தின் படம் திரையரங்களில் வெளியாகுவது என்று சொன்னாலே போதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும். அந்த அளவிற்கு தனக்கென ஒரு ரசிகர் படையைச் சேர்ந்தவர். இறுதியாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-
அஜித்துடன் சிவகார்த்திகேயன்

தற்போது தல அஜித் அவர்கள் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இந்நிலையில் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் பிறந்த நாள் வரப்போகிறது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.தல அஜித்தின் பிறந்த நாள் அன்று ரசிகர்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் அஜித்தின் புகைப்படத்தை பதிவிட்டு கமெண்டுகளும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், தல அஜித்தின் பிறந்த நாளை திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

இதையும் பாருங்க : முஸ்லிமாக மாறிய பின்னர் பெயரை மாற்றாமல் இருக்க காரணம் என்ன ? ரசிகரின் கேள்விக்கு யுவன் பதிலடி.

- Advertisement -

அதோடு சோசியல் மீடியாவில் தல பிறந்தநாளன்று புதியதாக ஹாஸ்டேக் உருவாக்கி பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி விடுவார்கள்.இன்று அஜித் தனது 50 வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பல்வேரு பிரபலங்களும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித்துடன் ‘ஏகன்’ படத்தில் நடித்த காட்சியின் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அஜித்துக்கு ஸ்பையாக நடித்திருப்பார்.

ஒரு நாளில் தலயுடன் இருந்து நடித்ததில் சில அனுபவங்களைபேட்டி ஒன்றில் கூறிய சிவகார்த்திகேயன், நான் முதலில் படப்பிடிப்பிற்கு சென்றவுடன் சற்று பதட்டமாக இருந்தேன். அவருக்கு திரையில் ஏன் இவ்வளவு வரவேற்ப்பு என அஜித் சாரை பார்த்ததும் தான் தெரிந்தது. அப்படி ஒரு தேஜஸ் அவரது முகத்தில். நான் பதட்ட மாக இருந்ததை அறிந்த அவரே என்னிடம் வந்து பேசினார்.நாம் என்ன செய்கிறோம் என்பதையும் தெரிந்து வைத்திருப்பார் அஜித். நாம் நன்றாக வாழ்கிறோமா என்பதை எல்லாம் விசாரிப்பார். என்னிடமும் வீட்டில் எல்லாம் என்ன செய்கிறார்கள்? வாழ்க்கை நன்றாக போகிறதா? பணத்தை சேர்ர்த்து வையுங்கள், அது மிக முக்கியம், அதிகமாகி சேர்த்தால் மற்றவர்களுக்கு உதவியும் செய்யுங்கள் எனக் அன்புடன் விசாரித்தார் தல அஜித்.

-விளம்பரம்-
Advertisement