இரவு 12 மணிக்கு அஜித்தை அழவைத்த அந்த சம்பவம் ! காரணம் என்ன தெரியுமா ?

0
7556

சினிமாவில் பல பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டாலும் அதில் சில பேர் மட்டுமே கடைசிவரை நீடித்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கின்றனர். அந்த வரிசையில் அஜித் -ஷாலினி என்றால் சினிமா உலகில் ஒரு மரியாதைக்குரிய காதல் ஜோடிகள்.
என்னதான் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் திருமணத்திற்க்கு பிறகும் இவர்கள் காதலித்து வருகின்றனர்.

ajith

- Advertisement -

அஜித் தனது குடும்பத்தையும் சரி தனது பிள்ளைகளையும் சரி மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொள்வார் என்பது நமக்கு தெரியும்.ஆனால் அவரது மனைவி ஷாலினி தனது கணவர் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை நிறுப்பித்திருக்கிறது இந்த சம்பவம்.

அமர்க்களம் படத்திற்கு பிறகு காதலித்து வந்த இவர்கள் ஒரு நாள், ஷாலினி அஜித்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது அவரது பிறந்த நாள் அன்று அவர்க்கு செல் போன் மூலமாக இரவு 12 மணிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.பின்னர் வெளியே வந்து பார்க்கும்படி சொன்னாராம் ஷாலினி, வெளியில் வந்து பார்த்தால் ஒரு கார் நின்று கொண்டிருந்ததாம். அந்த காரின் பின்புற டிக்கி முழுக்க அஜித் விரும்பிய அனைத்து பரிசுகளும் இருந்ததாம். அதனை பார்த்து அஜித் சந்தோஷத்தில் கண்கலங்கிவிட்டாராம் . அதனை அப்படியே படம் பிடித்து ஷாலினிக்கி அப்டேட் செய்தனராம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள்.

-விளம்பரம்-
Advertisement