வேஷ்டி விளம்பரம் மூலம் அஜித்திற்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு.! இயக்குனர் சொன்ன ரகசியம்.!

0
958
Ajith

இந்திய சினிமா துறை உலகில் பல சாதனைகள் செய்து கொண்டிருக்கும் ஹீரோக்களில் ‘ தல’ அஜித் என்ற பெயரைக் கேட்டாலே அனைவர் மனதிலும் உற்சாகம், ஆர்ப்பாட்டம், கொண்டாட்டம்தான். இவர் தென்னிந்திய தமிழ் திரைப்படதுறையில் பல படங்களில் நடித்துள்ளார். இவரின் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், பூவெல்லம் உன் வாசம், வில்லன், அட்டகாசம்,வீரம்,விஸ்வாசம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தந்துள்ளார். பல படத்தின் மூலம் ரசிகர் மனதில் அதிக ஈர்ப்பும் , நம்பிக்கையும் கொண்டிருந்தவர். இதனால் ரசிகர்கள் இவரை ‘அல்டிமேட் ஸ்டார்’,” தல” என்றுதான் அழைப்பார்கள். அஜித்குமார் சினிமாத்துறையில் மட்டுமில்லாமல் கார் ரேஸ், மாடல் ஆகியவற்றிலும் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

Image result for aasai film director


ஹைதராபாத்தில் பிறந்த அஜித் குமாருக்கு தமிழே தெரியாது. தமிழ் படங்களின் மூலமாகத்தான் தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். ஆரம்ப காலத்தில் இவர் விளம்பரங்களில் நடித்து வந்தார். விளம்பரத்தின் மூலம் தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. இவருடைய முதல் படம் பலபேருக்கு தெரியாது,அது ‘ என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் மாணவராக சிறிய வேடத்தில் தோன்றினார். ஹீரோவாக நடித்த இவருடைய முதல் படம் அமராவதி ஆனால் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அதைத் தொடர்ந்து அடுத்த படம் பாசமலர், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே போன்ற பல படங்களில் நடித்தார். இந்த படங்கள் மூலமும் அவருக்கு பெரிய அளவு வெற்றி இல்லை. ஆனால் “ஆசை” என்ற ஒரு படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இது மெகா ஹிட்டாக மாறியது. இந்த படத்தின் இயக்குனர் வசந்த் சாய் அவர்கள் கூறியது, நான் அஜித்தின் படங்களை பார்த்து அவருக்கு வாய்ப்பு தரவில்லை. அவரின் வேஷ்டி அணிந்து செய்த விளம்பரத்தை பார்த்து தான் ஆசை படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தேன். மேலும் ஆசை படம் மக்களிடத்தில் அதிக வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : லாஸ்லியா தங்கை மற்றும் அம்மா கூட வந்திருக்காங்க கவனிசீங்களா.! புகைப்பட ஆதாரம் இதோ.

இப்படி வேஷ்டி மூலமாக வாய்ப்பு கிடைத்த அஜித் குமார், தற்போது வேஷ்டி என்றாலே அஜித் குமார் தான் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய தோற்றமும் உடையும் மக்கள் மனதை கவர்ந்தது. மேலும் தற்போது நடித்த வீரம் படத்தின் மூலம் படம் முழுவதும் வேஷ்டி போட்டு அணிந்து இருந்த காட்சிகள் மக்களிடையே அதிக ஈர்ப்பையும், பாராட்டுகளையும் பெற்றிருந்தார். அதுமட்டுமில்லாமல் விசுவாசம் படத்தின் மூலம் குடும்பங்களின் ஆதரவையும் பெற்றார்.அதுமட்டுமில்லாமல் படம் முழுவதும் வேஷ்டி போட்டுக்கொண்டு நடிப்பதற்கு தலையால் மட்டும் தான் முடியும். வேஷ்டி என்பது தலைக்கு மட்டும் தான் பொருந்தும் என்று ரசிகர்களின் இடையே பல கருத்துக்கள் எழுந்தன.

Image result for director vasanth


இப்படி அஜித்குமார் பற்றி சொல்ல வேண்டுமென்றால் நிறைய தகவல்களை சொல்லலாம் அஜித் குமார் ரசிகர்கள் மீது மதிப்பு மரியாதையையும் அன்பையும் செலுத்துவார். அவருக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய 5 மொழிகளில் தெரியும். ஹைதராபாத் பிரியாணி என்றாலே ஒரு சுவை தான் அது போல தமிழ் சினிமா துறையில் உள்ள நட்சத்திரங்கள் இடையே அஜீத் பிரியாணி தான் பிரபலம் என்றும் கூறுவார்கள். இவர் கார் ரேஸ், கிரிக்கெட், ஸ்விம்மிங், ஏர் பைலட், சமையல், போட்டோகிராபி என பல துறையில் ஆர்வம் உள்ளவர். இவர் பைக் மெக்கானிக், பைக் ரேஸர் ,பிசினஸ் மாடலிங் எனப் பல தொழில்களை செய்து வந்தாலும் இவரை உயர்ந்த நிலையில் அதாவது உலக அளவில் புகழ்பெற வைத்தது சினிமா துறைதான் என்று பெருமையுடன் கூறுகிறார். இவப்படி அஜித்குமார் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இடையே பரவும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.