லாஸ்லியா தங்கை மற்றும் அம்மா கூட வந்திருக்காங்க கவனிசீங்களா.! புகைப்பட ஆதாரம் இதோ.!

0
53150
losliya

பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமக 79 நாட்களை நிறைவு செய்துள்ளது. கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் கேள்வி கேட்டு சேரன் ரகசிய அறையில் இருந்து கவினுக்கு கடிதம் அனுப்பியது, பிரீஸ் டாஸ்க்கின் போது முகெனின் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்தது, கொஞ்சம் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் என்று நேற்றய நிகழ்ச்சி நிறைவடைந்தது .

மேலும், இந்த வாரம் முழுக்க இந்த ப்ரீஸ் டாஸ்க் நடைபெற இருக்கிறது, நேற்றய நிகழ்ச்சியில் முகெனின் தங்கை மற்றும் அவரது தாய் பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே நுழைந்தனர். மேலும், இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ரகசிய அறையில் இருந்து சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-என்ட்ரி ஆகியுள்ளார்.

இதையும் பாருங்க : முகெனுக்கு தனது மோதிரத்தை பரிசளித்துள்ள அபிராமி.! அத அபிராமிக்கு யார் கொடுத்ததுனு பாருங்க.!

கடந்த சில மணி நேரத்திற்கு முன்னர் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் லாஸ்லியாவை சந்திக்க அவரது தந்தை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். 10 வருடங்கள் கழித்து தனது தந்தையை கண்ட சந்தோசத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார். ஆனால், அந்த ப்ரோமோவின் ஆரம்பத்தில் லாஸ்லியா ஏற்கனவே யாரிடமோ பேசி கொண்டு இருக்கிறார்.

மேலும், அவரது அருகில் இரண்டு பெண்கள் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். அது கண்டிப்பாக வனிதாவும் இல்லை ஷெரினும் இல்லை என்பது நம்மால் உறுதி செய்ய முடிகிறது. எனவே, அது லாஸ்லியாவின் அம்மா மற்றும் தங்கையாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.