அஜித்தின் கார் ரேஸ் வாழ்க்கையில் இன்று முக்கியமான நாள். என்ன தெரியுமா?

0
2155
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா கார் ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார். அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். நடிகர் அஜித்தை போல வேறு யாராலும் கார் ஓட்ட முடியாது என்று அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேர் கூறி நாம் கேட்டுளோம். அந்த அளவிற்கு தல கார் ஓட்டுவதில் கில்லாடி என்றும் சொல்லலாம்.

-விளம்பரம்-

அதே அஜித் வீட்டின் கராஜில் பல வகையான பைக் மற்றும் கார் நின்றுகொண்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் அஜித் வெளியில் சென்றால் அவர் சிகப்பு நிற சிப்ட் கார் அல்லது வெள்ளை நிற இன்னோவா காரில் தான் பயணம் செய்வார். மேலும்,அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்களுக்கு நடிப்பை காட்டிலும் பைக் ரேஸ், கார் ரேஸில் தான் ஆர்வம் அதிகம் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

இதையும் பாருங்க : ‘ஜெய்ஹோ’ என்று குறிப்பிட்டு இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கிய ஜாக்கி சான்.

- Advertisement -

அவருடைய எல்லா படத்திலும் ஒரு சீனில் ஆவது பைக் ரேஸ் காட்சிகள் எடுக்கப்படும். அந்த வகையில் தற்போது வெளிவந்து சூப்பர் ஹிட்டான நேர்கொண்டபார்வை படத்திலும் ஒரு பைக் ரேஸ் ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதை தல அஜித் அவர்கள் தான் செய்தார் என்ற தகவலும் வெளிவந்தது. இப்படி அவர் நடிப்பில் காட்டும் அளவிற்கு அதிகமாக பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர்.

அதை விடக் கூடாது என்பதற்காகவே தன்னுடைய எல்லா படங்களிலும் அட்லீஸ்ட் ஒரு காட்சியிலாவது பைக் ரேஸ் வைத்து படம் நடித்து வருகிறார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அவ்வளவு ஏன் வாலி படத்தின் போது இயக்குனர் எஸ் ஜே சூர்யாவிற்கு பைக் கார் கூட வாங்கி கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இன்று அஜித்தின் ரேஸ் வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாள்.

-விளம்பரம்-

அது என்னவெனில், கடந்த 2004 நடைபெற்ற பிரிட்டிஷ் பார்முலா த்ரீ ரேஸ் (British Formula Three Race) போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இதனை அஜித் ரசிகர்களும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement