‘ஜெய்ஹோ’ என்று குறிப்பிட்டு இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கிய ஜாக்கி சான்.

0
1290
- Advertisement -

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,18,921ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 226,769 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உலகளவில் கொரோனாவால் 58,937 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். அதே போல் இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் 2902 பேர் பாதிக்கப்பட்டும், 68 பேர் பலியாகியும் உள்ளனர்.

-விளம்பரம்-

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அதையும் மீறி சில பேர் வெளியில் நடமாடுகிறார்கள். இந்நிலையில் உலக அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஜாக்கிஜான் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்து இந்தியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியிருப்பது, அனைவருக்கும் இது மிகவும் கஷ்டமான காலம் தான். நாம் கரோனா வைரஸ் என்ற ஒரு பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அனைவரும் வீட்டில் இருக்க வேண்டியது கட்டாயமான ஒன்று. மக்கள் அனைவரும் அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் வெளியில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிந்து கொண்டும், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற செயல்களை செய்ய வேண்டும்.

View this post on Instagram

Stay Safe! Stay Strong! ??

A post shared by Jackie Chan 成龍 (@jackiechan) on

பாதுகாப்பாகவும், மன தைரியத்துடனும் இருங்கள். இந்த கொரோனா வைரஸை கூடிய விரைவில் ஒழிப்போம். ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. ஜெய்ஹோ என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவினால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. திரைப்பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

உலக அளவில் பிரபலமான நடிகர்களில் ஜாக்கிசானும் ஒருவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் ஆக்ஷன் இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர், தொழில் நடத்துபவர், பாடகர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவருடைய படம் என்றாலே ஆக்ஷன், நகைச்சுவைகளுக்கு பஞ்சமே இருக்காது. இவருடைய பல பாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. உலகம் முழுவதும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஜாக்கி சான் அவர்கள் கார்ட்டூன்கள் மற்றும் வீடியோ கேம்களிலெல்லாம் இடம் பெற்று உள்ளார்.

Advertisement