மகனுக்கு ‘தல அஜித்’ என்று பெயர் வைத்து பள்ளியில் சேர்த்த ரசிகர்.. ட்ரெண்டாகும் சிறுவனின் புகைப்படம்..

0
6596
Ajith

தென்னிந்திய சினிமாத் திரை உலகில் உள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக அல்டிமேட் ஸ்டார் ஆக அஜித் குமார் கலக்கி கொண்டிருக்கிறார். இவர் பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் மட்டும் தான் அதிகம் நடித்து உள்ளார். இதனாலேயே சினிமா துறை உலகம் இவரை “அல்டிமேட் ஸ்டார்” என்றும் “தல” என்றும் தான் அழைப்பார்கள். தல அஜித் என்று சொன்னால் போதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தவர். அந்த வகையில் மதுரையில் உள்ள ஒரு குடும்பம் 2013ம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு “தல அஜித்” என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த தகவல் தான் தற்போது இணையங்களில் ட்ரெண்டிங்காக பரவி வருகின்றது.

மேலும், இந்த தகவலால் தல ரசிகர்கள் பயங்கர குஷியில் உள்ளார்கள். அஜித் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக மதுரையில் உள்ள மதுரை வீரன், ஜோதிலட்சுமி ஆகிய தம்பதியினர் தன்னுடைய மகனுக்கு “தல அஜித் “என்று பெயர் வைத்து உள்ளார்கள். ஏன்னா! அந்த அளவிற்கு தல அஜீத்தின் தீவிர ரசிகர்கள் என்று கூட சொல்லலாம். எப்பவுமே நம்ம ஒருவரின் மீது ஆர்வம், ஈர்ப்பு இருந்தால் நாம் அவர்களுக்கு போஸ்டர் ஒட்டும்,பேனர் அடிப்போம்,பாலபிஷேகம்,பூஜை எல்லாம் செய்வோம், அவர்கள் சம்பந்தப்பட்ட பொருட்களை சேர்த்து வைப்போம்.இது தான் வழக்கம். எப்போதுமே பெற்றோர்கள் தனக்கு பிறந்த குழந்தைக்கு அவர்களுடைய அப்பா, அம்மா பெயர், கடவுளின் பெயர் தான் வைப்பாங்க. ஆனால், மதுரையில் உள்ள குடும்பம் அதையெல்லாம் தாண்டி தனக்கு பிறந்த குழந்தைக்கு கொஞ்சம் வித்தியாசமாக தன்னுடைய அஜித்தின் பெயரை வைத்துள்ளார்கள்.

இதையும் பாருங்க : இறுதியில் 3 அணியாக பிரிந்த வி ஆர் தி பாய்ஸ் கேங்.. கவலையில் ரசிகர்கள்..

- Advertisement -

இது ஆச்சரியப்படுத்தும் வகையிலும், தல ரசிகர்களுக்கு சந்தோசப்படுத்தும் வகையிலும் உள்ளது.இந்த சிறுவன் மதுரையில் உள்ள ‘செவன்த் டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல்’ பள்ளியில் படிக்கிறான். தற்போது தல அஜித் பெயர் கொண்ட அந்த பையனின் ஐடி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இது குறித்து பல கருத்துக்களையும், அந்தப் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் தல ரசிகர்கள். ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை தல அவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடிக் கொண்டே போகிறதே தவிர எப்பவுமே குறைந்தபாடு இல்லை. அந்த அளவிற்கு அஜித் அவர்களின் நடிப்பாலும், திறமையாலும் மக்களின் மனதை ஈர்த்துள்ளார். அப்ப இனிமேல் அந்த சிறுவனை தல அஜித் என்று தான் அழைப்பார்கள். மாஸ் காட்டுவார் அந்த பையன் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-

மேலும், தல அவர்கள் சினிமா துறைக்கு எந்த ஒரு முன் அனுபவமும், பின்னணியும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேறி இந்த அளவிற்கு வந்தவர். இவர் சினிமா துறையில் பல வெற்றி படங்களை தந்துள்ளார். அது மட்டும் இல்லைங்க இந்த வருடத்தில் வெளியான விசுவாசம், நேர்கொண்டபார்வை படமும் வேற லெவல்ல தூள் கிளப்பியது என்று கூட சொல்லலாம். இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் இரட்டை வேடத்தில் “தல 60” என்ற படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அதற்கான படப்பிடிப்பு தொடங்க போகிறது என்ற தகவலும் சமூக வலைத் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் புதிய லூக்குடன் அஜித் தோன்றுகிறார். இந்த ரெண்டு தகவல்களும் தல ரசிகர்களுக்கு குஷியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement