அஜித் உடல்நிலை சீராக உள்ளது.. தல ரசிகர்கள் மகிழ்ச்சி…

0
959
Ajith

தல அஜித் நடிப்பில் சென்ற மாதம் வெளிவந்த படம் விவேகம்.
படத்திற்கு இருவகையான விமர்சனங்கள் இருந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளதாக படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.

படம் வெளியாகி மூன்று வாரங்கள் கடந்த நிலையிலும் வார இறுதி நாட்களில் இப்போதுவரை இப்படம் திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
Ajith

- Advertisement -

படத்திற்காக தல டூப் போடாமல் சில காட்சிகளில் ரொம்பவும் ரிஸ்க்கான முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதனால் அவருடைய தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது, படப்பிடிப்பு முடிந்தபிறகு அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என ஏற்கனவே நினைத்திருந்தார். அதன்படி, படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தல அஜித் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
Ajith

ரகசியமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. பின்னர் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் தல மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

இதையும் படிங்க : விரைவில் தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார் ஷெரில் !

இந்நிலையில், தல ரசிகர்கள் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் என்றும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும்  விரைவில் வீடு திரும்பி விடுவார் என்றும் நெருங்கிய வட்டாரங்களில் இருந்து ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ajith

இதனால், அஜித் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவுள்ளார் என்கிற செய்தியறிந்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Advertisement