உங்க விஸ்வாசத்த, விஸ்வாசத்தோட நிறுத்திக்கோங்க தல- அஜீத் ரசிகர்கள் கோரிக்கை ?

0
2663
ajith

தல – சிவா கூட்டணி உறுதியாகிவிட்டது. இது தொடர்ந்து 4ஆவது முறை இந்த கூட்டணி சேர்வது. முதலில் வீரம், வேதாளம், என விவேகத்தில் வந்து நின்று அடுத்ததாக விஸ்வாசம் உறுதியாகிவிட்டது.
Ajithஇந்த கூட்டணி மீண்டும் சேர்வது துவக்க முதலே அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். வீரத்தில் ஆரம்பித்ததை வெகுவாகக் கொண்டாடிய தல ரசிகர்கள், வேதாளத்தை ரசித்தார்கள்.

பின்னர் மீண்டும் சிவாவா என சற்று கடுப்பான ரசிகர்கள், சிவா இந்த படத்தில் தலலை வித்யாசமன மேனரிசத்தில் காட்டுவார் என மனதை தேற்றிக்கொண்டு அந்த விவேகம் படத்தையும் பார்த்த பின் லாஜிக் இல்லா மேஜிக் தான் மிச்சம் என ஒரு முடிவிற்கு வந்து விவகத்திற்கு அடுத்த படம் சிவாவுடன் வேண்டாம் என ஒரு சேர முடிவெடுத்து போல் கூறினார்கள் தல ரசிகர்கள்.
visuvasam ஆனால், அது தல காதுக்கு போனதா என்று தெரியவில்லை, மீண்டும் சிவாவுடன் கைகோர்த்து நடை போட விஸ்வாசமாக வந்துவிட்டார் தற்போது.

இதையும் படிங்க: தல அஜித் மீது உள்ள விஸ்வாசத்தை சில மணி நேரத்தில் காட்டிய ரசிகை- புகைப்படம் உள்ளே ?

இதனையும் மனதை தேற்றிக் கொண்டாடி வரும் தல ரசிகர்களின் ஒரு பகுதி கூறுவது என்னவென்றால், உங்கள் விஷ்வாசத்தை இந்த ‘விஸ்வாசத்தோடு’ நிறுத்திக் கொள்ளுங்கள் என தலயிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், சிவாவுடன் வேறு ஒரு நாள் படம் செய்யலாம், அடுத்த படத்தையும் அவருடம் செய்ய வேண்டாம், எனவும் கேட்டுள்ளனர்.
ajithயார் என்ன கேட்டாலும் தல எடுப்பது தானே முடிவு எனவும் மனதை தேற்றி வருகின்றனர் தல ரசிகர்கள்.