தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். சினிமா உலகில் தன்னுடைய விடா முயற்சியாலும், தன்னம்பிக்கையாலும் நடிகர் அஜித் இந்த அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. அந்த அளவிற்கு மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று (மே 1-ஆம் தேதி) தனது பிறந்தநாளை கொண்டாடிஇருந்தார் அஜித். ஆகையால், அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#HBDThalaAjith, #AjithKumar, #தலஅஜித்’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வந்தனர் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். இவர்களை போலவே தமிழ் சினிமாவில் இன்னொரு முன்னணி நடிகரான விஜய்யின் ரசிகர்களும் ட்விட்டரில் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தது சர்ப்ரைஸாக இருந்தது.
வாழ்த்து சொல்லாத கமல் :
அதே போல பல்வேறு பிரபலங்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துஇருந்தனர். அதே அஜித்தை பற்றிய பல்வேறு அறிய விஷயங்களை தோண்டி எடுத்து வெளியிட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும் கமலை திட்டி தீர்த்து வருகின்றனர். எனெனில் நேற்று நடிகர் கமல், அஜித்தின் பிறந்தநாளுக்கு எந்த ஒரு வாழ்த்துக்கள் பதிவையும் போடவில்லை.
திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் :
இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் கமலை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், கமலுக்கு அஜித்தை கண்டு பொறாமை அதனால் தான் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளின் போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார் கமல். அதில் ”தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி @actorvijayக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
கமல் மீது அஜித் வைத்திருக்கும் அஜித் :
தற்போது அந்த பதிவை எல்லாம் தோண்டி எடுத்து கமலை தாக்கி வருகின்றனர் அஜித் ரசிகர்கள். மேலும், கமல் மீது அஜித் எந்த அளவிற்கு மரியாதை வைத்து இருக்கிறார் என்பதற்கு சான்றாக ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’ பட சமயத்தில் நடிகர் அஜித், ஜெயா டிவியில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அந்த பேட்டியில் நடிகர் அஜித்தை சந்தானம் தான் பேட்டி எடுத்தார். அதே போல அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தார் அஜித்.
அட்வைஸ் செய்த அஜித் :
அப்போது பெண் ரசிகை. அந்த பெண் பேசிக்கொண்டு இருக்கும் போதே அந்த பெண்ணிடம் கமல் சார், நாட் கமல் என்று மெதுவாக சொல்லிகொண்டே இருந்தார் கமல், இருப்பினும் அந்த பெண் கமல் என்று சொல்லிகொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் நடிகர் அஜித் ‘Mr.கமல்ஹாசன் அல்லது கமல் சார், கமல் கிடையாது ‘ என்று கமலை பேர் சொல்லி அழைக்க வேண்டாம் என்று சொல்லாமல் சொன்னார்.