இந்த விஷயத்தில் எல்லாம் விளம்பரம் கூடாது..!தல தலதாங்க..!

0
553

தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சேதம் ஏற்பட்டது. பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும்,பொது மக்களும் உத்தி செய்து வந்த நிலையில் பல்வேறு நடிகர்களும் நிதியுதவிஅளித்திருந்தனர்.

Ajithkumar

- Advertisement -

ஆனால், அல்டிமேட் ஸ்டார் அஜித் மட்டும் இன்னும் எந்த நிதியுதவியையும் அளிக்கவில்லை என்று பலரும் குறை கூறிவந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதியுதவி அளித்த பெருமபாலான நடிகர்களின் பெயர்கள் சமூக ஊடகங்களில் பரவியது. ஆனால், அஜித் செய்த நிதியுதவி மட்டும் தமிழக அரசு வெளியிட்ட பின்னரே பலருக்கும் தெரியவந்தது.அஜித் 15 லட்சத்திற்கான காசோலையை தனது உதவியாளரை அழைத்து முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்குமாறு கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Ajithfund

அப்போது அஜித்தின் உதவியாளரும், நண்பர்களும் இந்த காசோலையை நீங்களே முதல்வரிடம் நேரடியாக கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், அதனை மறுத்துள்ள அஜித், இந்த விடயத்தில் எல்லாம் விளம்பரம் தேடிக்கொள்ள கூடாது யாருக்கு உதவி போய் சேர வேண்டுமோ அது சரியான நேரத்தில் போய் சேர வேண்டும் என்று கூறியுள்ளார்.

Advertisement