அதான் வெளியே வரதே இல்ல.! முதன் முறையாக ரசிகர்களால் கடுப்பான தல.!வைரலாகும் வீடியோ.!

0
437
Ajith

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா ஒன் கார் ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார்.  

அதுமட்டுமின்றி தல அஜித் துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் இருக்கும் புகைப்படங்கள் சில சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து அங்கே ரசிகர் கூட்டமும் குவிந்தது.

இந்நிலையில் தல அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சயில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அங்கே வந்த ரசிகர்கள் சிலர் நாங்கள் 5 மணி நேரமாக காத்துக்கொண்டிருக்குகிறோம் ஒரே ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொள்கிறோம் தல என்று தொல்லை செய்து கொண்டிருந்தனர்.

பொதுவாக புகைப்படம் எடுக்க கேட்டால் பக்குவமாக சொல்லும் அஜித் இம்முறை ரசிகர்களை பார்த்து இங்கிருந்து போய் விடுங்கள் என்பது போல கை எடுத்து கும்பிடு போட்டார். மேலும், அஜித்தின் பயிற்சியாளரும் ரசிகர்களிடம் இதுக்கு பயந்து கொண்டு தான் அவர் வருவதே இல்லை. அவரை கொஞ்சம் பிராக்டீஸ் எடுக்க விடுங்க என்று கூறினார்.