அஜித்திற்கு இந்த திறமையும் இருக்கிறதா.! புகைப்படத்தை பதிவிட்ட பிரபல நடிகை.!

0
1110
Ajith-gun
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார். 

-விளம்பரம்-

அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். நடிகர் அஜித்தை போல வேறு எந்த ஒரு நடிகரும் கார் ஓட்ட முடியாது என்று அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேர் கூறி நாம் கேட்டுளோம். 

- Advertisement -

சமீபத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் ஆளில்லா விமான தயாரிக்கும் தக்ஷா என்ற குழுவின் ஆலோசகராக பணியாற்றி அண்ணா பல்கலை கழகத்திற்கு பெருமை சேர்த்தார் அஜித். இத்தணை திறமை கொண்ட அஜித்திற்கு வேறு ஒரு திறமையும் இருக்கிறது.

ஆம், தல அஜித் துப்பாக்கி சுடுதலிலும் ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அங்கே அஜித் நடந்து செல்லும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement