ஆவலுடன் எதிர்பார்த்த அஜித்தின் ‘வலிமை’ படத்தின் ட்ரைலர் – ப்பா, வெறித்தனம் Overloaded

0
445
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. அஜித் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். மேலும், இந்த படம் அடுத்த வருடம் அதாவது வரும் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிய நிலையிலும் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது. நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.

- Advertisement -

வரவேற்பை பெற்ற டீஸர், மேக்கிங் வீடியோ :

இப்படி ஒரு நிலையில் தான் இந்த படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோ பாடல்கள் என்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளியன்று வெளியாகாமல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

வலிமை படத்தின் ட்ரைலர் :

இருப்பினும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக அஜித் படத்தின் அப்டேடுகள் வியாழக்கிழமை தான் வரும் அந்த வகையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

-விளம்பரம்-

வலிமை கதை என்ன :

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனர் வினோத், இந்த படம் குறித்து பேசிய போது ‘இது நான் எழுதிய இரண்டாவது கதை. ஆனால், இது வேறு ஒரு நடிகருக்காக நான் எழுதியது. மேலும், இந்த கதையை முதலில் நான் வேற மாதிரி எழுதி இருந்தேன். அப்போது நான் போலீஸ் கதாபாத்திரமாக எல்லாம் கதை எழுதவில்லை. இன்று இருக்கும் இளைஞர்களுக்கு வரும் பிரச்சனைகள், அவர்களது குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பார்க்கிறோம்.

vinoth

எந்தவொரு சமரசமும் செய்யவில்லை :

அதுபோன்ற இரண்டு பிரச்சனைகளை நான் எடுத்துக் கொண்டு தான் இந்த கதையை உருவாக்கினேன். அந்த பிரச்சினைகள் ஹீரோவின் குடும்பத்தில் ஏற்பட்டால் என்னவாகும்? அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? என்பது தான் படத்தின் கதை. இதிலிருந்து சில விஷயங்களை எடுத்துக்கொண்டு அதை ஒரு பெரிய புதிய கதையாக மாற்றி இயக்கி இருக்கேன். அதேபோல் என்னுடைய பக்கத்திலிருந்து நான் எந்தவொரு சமரசமும் செய்யவில்லை.

Advertisement