மிக்ஜாம் புயல் பாதிப்பு – அஜித் செய்துள்ள -உதவி பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்த சீக்ரெட்.

0
566
Bayilwan
- Advertisement -

அஜித் செய்த உதவிக்கு குறித்து பத்திரிகையாளர் ரங்கநாதன் கூறி இருக்கும் தகவல் தான் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில வாரமாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது. சோசியல் மீடியா முழுவதும் மிக்ஜாம் புயல் குறித்த செய்தி தான் அதிகமாக வைரலாகி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும், வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதோடு இது வரலாறு காணாத மழை என்றும் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக அரசு 4000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. அதெல்லாம் என்ன ஆனது? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்கள். தற்போது மீட்பு பணிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மேலும், பிரபலங்கள் பலருமே தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இவர்களுடன் சமூக ஆர்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

- Advertisement -

மிக்ஜாம் புயல்:

அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகை ரக்ஷிதா, கலா மாஸ்டர், அறந்தாங்கி நிஷா, கேபிஒய் பாலா போன்ற பலரும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள். இந்த புயலால் தண்ணீர், உணவு, மின்சாரம் எதுவும் இல்லாமல் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். படகுமூலம் தான் மக்களுக்கு உணவுகளையும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

அஜித் குறித்த விமர்சனம்:

சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்கள் கூட இந்த புயலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் ஆகியோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள். அதற்கு பிறகு இவர்களை மீட்டு பாதுகாப்பு இடத்தில் விட்டார்கள். இதற்கு அஜித்தும் நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவி செய்திருந்தார். அப்போது பலருமே, அஜித் பிரபலங்களுக்கு மட்டும்தான் உதவி செய்தார்.

-விளம்பரம்-

அஜித் செய்த உதவி:

சாதாரண மக்களை கண்டு கொள்ளவில்லை என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்து இருந்தது. இந்த நிலையில் இது குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியது, அஜித் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் பேரை தன்னுடைய வீட்டில் பத்திரமாக தங்க வைத்து அவர்களுக்கு வேண்டிய உணவு மற்றும் தேவையான பொருள்களை எல்லாம் வழங்கி இருக்கிறார்.

பாராட்டும் மக்கள்:

அதுமட்டுமில்லாமல் திரும்பி அவர்கள் தங்களுடைய இடத்திற்கு செல்லும் போது 10 ஆயிரம் ரூபாயும் கொடுத்திருக்கிறார். யாருக்கும் தெரியாமல் அஜித் உதவி செய்திருக்கிறார். இப்படி எல்லாம் மோசமாக பேசாதீர்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பலரும் அஜித்தின் நல்ல உள்ளத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement