தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர்தான் நம்ம “தல அஜித்”. மேலும்,இவரை திரையுலகம் அல்டிமேட் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். நம்ம தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதிலும் இந்த வருடம் வெளிவந்த நேர்கொண்டபார்வை ,விஸ்வாசம் படம் பட்டையை கிளப்பியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மெகா ஹிட் படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் “தல 61” என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்க உள்ளது என்றும் அறிவித்துள்ளார்கள்.இப்படி சூட்டிங் பிஸியில் இருக்கும் அஜித் குமார் அவர்கள் நடிப்பில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி சாதனை புரிந்தும் வருகிறார்.
அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அது மட்டும் இல்லைங்க கார் மற்றும் பைக் ரேஸ் சம்பந்தமான பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த வருடம் கூட அஜித் சென்னை கல்லூரி மாணவர்களுக்கு ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார். அதோடு பறக்கும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த ட்ரோன் குழு சர்வதேச அளவில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் அடுத்த துப்பாக்கி சுடுதல் துறையில் சாதிக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார். இதற்காக சமீபத்தில் கூட கோவையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு உள்ளார். மேலும்,இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டியாக பரவியது. இதனைத்தொடர்ந்து இவர் ஏற்கனவே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவலை ரசிகர்கள் வெளியிட்டார்கள்.
இதையும் பாருங்க : அந்த நடிகையிடம் உடலுறவு கொண்டேன்.. லலிதா கொள்ளையன், எய்ட்ஸ் நோயாளி முருகன் கொடுத்த ஷாக்..
மேலும், அது சம்பந்தமான புகைப்படம் , வீடியோ ஆதாரங்களையும் இணையங்களில் வெளியிட்டார்கள். இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் தலயின் பல முயற்சிகளையும் திறமைகளையும் பாராட்டி , வாழ்த்துக்களையும் தெரிவித்து வந்துகொண்டிருந்தனர். மேலும் ட்விட்டரில் “#ThalaAJITHatRifleChampionship ” என்ற ஹாஸ்டேக் ஒன்றை உருவாக்கியும் வந்தார்கள். இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராஃபர், மெக்கானிக், யுஏவி சிஸ்டம் அட்வைசர், ஹெலிகாப்டர் பைலட் ட்ரைனர் என பலதுறைகளில் சாதனை புரிந்து வருகிறார். தற்போது துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு உள்ளார்.
இதற்காக அவர் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு வருகிறார். மேலும் அவர் கலந்து கொண்டார் என்ற ஆதாரங்களுக்காக புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. அது மட்டும் இல்லைங்க டெல்லியில் நடந்த துப்பாக்கி போட்டியில் டாப் 10 இடங்களில் நம்ம தல அஜித் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். இதனால்,தல ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். தல அஜித் அவர்கள் துப்பாக்கி சுடும் போட்டியில் 200 மதிப்பெண்களைப் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளார் என தெரிய வந்தது. அப்ப நம்ம தல ரசிகர்கள் மாஸ் காட்டுவாங்க…. மேலும், தலயின் புதிய படம் குறித்தும், அவரின் சாதனை குறித்தும் தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.