‘ஒரே ஒரு போட்டோ குடுத்துட்டு போடா’ – கூட்டத்தில் அஜித்தை அசிங்கப்படுத்திய நபர். அஜித்தின் ரியாக்ஷனை பாருங்க. வீடியோ இதோ.

0
16256
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். மேலும், தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் . அதிலும் 2019 ஆம் வருடம் வெளிவந்த நேர்கொண்ட பார்வை , விஸ்வாசம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் பட்டையை கிளப்பியது என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு மெகா ஹிட் படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து தற்போது அஜித் அவர்கள் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தின் “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். அதோடு தல அஜித் அவர்கள் சமீப காலமாகவே படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார்.

இதையும் பாருங்க : சிவகார்த்திகேயன் – கெளதம் மேனன் படத்தை உறுதி செய்த தயாரிப்பாளரின் மகள் – வைரலாகும் இன்ஸ்டா பதிவு.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் கூட இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாதிரி’ வெளியாகி இருந்தது. இந்த பாடலுக்கு யுவன் அவர்கள் இசை அமைத்திருந்தார். தற்போது இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் தல ரசிகர்கள் வலிமை படத்தின் டீசருக்காக ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தல அஜித்தின் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த தல ரசிகர்கள் அனைவரும் கொதித்துப் போய் உள்ளார்கள். அந்த வீடியோவில் தல அஜித்தை பார்த்து ரசிகர் ஒருவர் ‘ஒரு போட்டோ குடுத்துட்டு போடா’ என்று தரக்குறைவாக மரியாதை இல்லாமல் கத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த தல ரசிகர்கள் அனைவரும் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்தும், கமெண்டு போட்டும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement