தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளை தொடர்ந்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் அஜித்குமார் ரேஸிங் அணியும் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்து சாதித்தது.
அஜித் குறித்த தகவல்:
இதை அடுத்து இவர் கார் ரேசிங்கிலும், தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். இதை அடுத்து தன்னுடைய கார் ரேஸ் பந்தயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக பல சேனல்களுக்கு அஜித் அவர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் அவர்கள் தன்னுடைய கடந்த கால கசப்பான அனுபவத்தை பற்றி கூறி இருக்கிறார். அதில் அவர், ஒரு காலத்தில் சினிமாவில் பிரபலமாக இருந்தபோது நான் வெளியே சென்ற போது ரசிகர்கள் பார்த்து விட்டார்கள்.

அஜித் பேட்டி:
அவர்கள் என்னிடம் கை கொடுப்பதற்காக கையேந்தினார்கள். நானுமே அவர்களுக்கு கை கொடுத்துவிட்டு காரில் ஏறினேன். அதற்கு பின்பு தான் என்னுடைய கையில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்தேன். அப்போது தான் கூட்டத்தில் யாரோ ஒருவர் என் கையை பிளேடால் கீறி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. அந்த தழும்பு என் கையில் இன்னுமே இருக்கிறது. அதேபோல் நான் அடிக்கடி விபத்தில் சிக்குவதை பற்றி நிறைய சோசியல் மீடியா பேசுகிறார்கள்.
https://www.youtube.com/watch?v=MPDNh7h2ISw
கசப்பான அனுபவம்:
கார் ரேசிங் செய்பவர்கள் விபத்தில் செய்வது வழக்கம் தான். நான் ஒரு நடிகன் என்பதால் தான் அது வெளியில் தெரிகிறது. இதுவரை நான் விபத்தில் சிக்கி 29 முறை அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். இத்தனை காயங்கள் வந்தும் ஒரு முறை கூட என் மனதில் இந்த ரேசிங்கை விட்டு விடலாம் என்று எண்ணம் வந்ததே கிடையாது. ஒவ்வொரு முறை விபத்தில் சிக்கும் போதும் அதிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு அதிலிருந்து எப்படி கடந்து செல்ல வேண்டும் என்று தான் யோசிப்பேன். அதை தான் இத்தனை ஆண்டுகளாக செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.






