தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளை தொடர்ந்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் கார் பந்தயம் நடைபெற்றது. இதில் அஜித்குமார் ரேஸிங் அணியும் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்து சாதித்தது.
அஜித் குறித்த தகவல்:
இதை அடுத்து இவர் கார் ரேசிங்கிலும், தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித், நான் ரொம்ப மிடில் கிளாஸ் குடும்பத்தில் வளர்ந்தவன். எனக்கு ஒரு மூத்த சகோதரர் இருந்தார். எனக்கு எட்டு வயதிலேயே சமைக்க கற்றுக் கொடுத்தார்கள். நான் ரொம்ப சின்ன வயதிலேயே கிச்சன் வேலை செய்த நினைவுகள் எல்லாம் எனக்கு நினைவு இருக்கிறது. எல்லோருமே இதை செய்ய வேண்டும் என்று அவசியம் கிடையாது. நீங்கள் பொது வாழ்க்கைக்கு வரும்போது உங்களுக்கு நிறைய கமிட்மெண்டுகளும் கடமைகள் இருக்கும்.

அஜித் பேட்டி:
அதை நிறைவேற்றுவதற்காக உங்களுக்கு மற்றவர்களின் தேவை இருக்கும். அது நேரத்தை மிச்சப்படுத்தும். உங்களுக்கு தினசரி உதவி செய்ய ஒரு குழு இருப்பதை நான் தவறு என சொல்ல மாட்டேன். ஆனால், நான் அதை செய்யாமல் இருப்பதற்கு காரணம் சில சமயம் அது உங்களை பாழாக்கி விடும். உங்கள் கைப்பையை தூக்கவும், மற்ற வேலைகளுக்கும் உதவி செய்வார்கள். பின் காலப்போக்கில் உங்களை சுற்றி இருக்கும் அனைவரிடத்திலும் அதை எதிர்பார்க்கத் தொடங்கி விடுவீர்கள். ஒரு காலத்தில் நானும் அப்படி இருந்திருக்கிறேன். இப்போது அதற்காக வெட்கப்படுகிறேன். அதனால்தான் இப்போது எல்லாவற்றிலும் இருந்து நான் விலகி ருக்கிறேன்.

உதவியாளர்கள் வைக்காத காரணம்:
இங்கே எல்லாவற்றையும் நானே செய்வதை ரசிக்கிறேன். குழந்தை பருவத்தில் கற்றுக் கொண்ட விஷயங்கள் தற்போது உதவுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு என்னை சந்தித்திருந்தால் நீங்கள் என்னை வெறுத்து இருப்பீர்கள். நான் பாழாகி இருந்தேன் என்று சொல்லவில்லை. ஆனால், என்னிடம் ஒரு குழு இருந்தது. உங்களை சுற்றி அதிகமானவர்கள் இருந்தால் வாழ்க்கை கடினமாக இருக்கும். நான் நிறைய நேரத்தை அவர்கள் இடையிலான தினசரி சண்டைகளை தீர்த்துப்பதிலும், அவர்களை நிர்வாகிப்பதிலுமே வீணடித்து விட்டேன். ஆனால், முடிந்தவரை சுயமாக இருப்பது நல்லது என்று நினைத்தேன் என்று கூறுகிறார்






