பிரபல நடிகை ஷாலினி அஜித்குமார் தனது மகன் பள்ளியில் செய்த சாதனைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமா பிரபலங்களில் எவ்வளவோ புதிது புதிதாக தம்பதியர்கள் வந்தாலும் முதலில் அனைவருக்கும் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். இதில் அஜித்குமார் திரையுலகில் முன்னணி நடிகராக தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் திரை உலக சாதனையை பாராட்டி சமீபத்தில் கூட இவருக்கு மத்திய அரசால் ‘பத்ம பூஷண் ‘ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் சினிமாவை தாண்டி கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் கூட இவர் துபாயில் நடைபெற்ற 24H கால் பந்தயத்தில் தனது அணியுடன் கலந்து கொண்டு 3 ஆவது இடத்தை வென்றார். ஆனால், திருமணத்திற்கு பின்னர் நடிகர் ஷாலினி நடிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார். இவர் கடைசியாக ‘பிரியாத வரம் வேண்டும்’ என்ற படத்தில் தான் நடித்தார். இவர்களுக்கு தற்போது அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.
அஜித்தின் மகன்:
இதில் அஜித்தின் மகன் ஆத்விக், விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக இவர் கால்ப்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்குவதாக கூறப்படுகிறது. மேலும், இவர் சென்னையில் எஃப்சி ஜூனியர் அணியில் இடம்பெற்று இருக்கிறாராம். தற்போது நடிகர் ஷாலினி தனது மகன் ஆத்விக், பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு வென்றிருக்கும் வீடியோவை ஷேர் செய்திருக்கிறார். அதாவது பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு ஆத்விக் 3 தங்க மெடல்களை வாங்கி இருக்கிறார்.
மூன்று தங்க மெடல்கள்:
அவர் ஒன்றல்ல மொத்தம் 3 ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு அந்த மூன்று போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து மூன்று தங்கம் மெடல்களை வாங்கியுள்ளாராம். முதலில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துள்ளார். பின்னர் 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் தன்னுடைய அணிக்காக சிறப்பாய் ஓடிய ஆதிக் அதிலும் முதலிடத்தை பிடித்துள்ளார். தற்போது இதைப் பார்த்து வரும் இணையவாசிகள் தந்தையைப் போல தான் பிள்ளை இருப்பார் என்று ஆத்விக்கை வாழ்த்தி, அந்த வீடியோவுக்கு லைக்கை தெறிக்க விடுகின்றனர்.
விடாமுயற்சி :
அதோடு அஜித்குமார் ரசிகர்கள் தற்போது இந்த வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
குட் பேட் அக்லி:
மேலும், இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். பொங்கலுக்கு வெளியாக வேண்டிய இப்படம் சில காரணங்களால் பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித், ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரபு, அர்ஜுன் தாஸ், யோகி பாபு உட்பட பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.