உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அஜித்தா மாறிய தல.! வைரலாகும் புகைப்படங்கள் .!

0
3332
Ajith
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். அஜித் அவர்களின் நடிப்பில் “தல 60” படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்று இணையதளங்களில் அவரின் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஜெட் வேகத்தில் வெளியானது. இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்தில், ஆர்ப்பாட்டத்திலும் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்தது.அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்திலும் தயாரிப்பாளர் போனி கபூர் , இயக்குனர் வினோத் என்று அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் தல நடிப்பில் வெளியான “விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை” ஆகிய இரண்டு படங்களும் மக்களிடையே அதிக வரவேற்பையும்,நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் “தல 60” என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள் படக்குழு.

-விளம்பரம்-
Image

இதனைத் தொடர்ந்து அஜித் அவர்கள் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது. மேலும்,இந்த படத்தின் கதை குறித்து ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்தி இணையங்களில் வருகிறது. ஆனால்,இயக்குனர் வினோத் அவர்கள் இது குறித்து கூறுகையில், இது என்னுடைய கற்பனை கதை தான் என்று கூறியிருந்தார். தல 60 படத்தில் அஜித் அவர்கள் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் கூறியிருந்தார். அதற்காக அவர் கடுமையாகவும், தீவிரமாக உடற்பயிற்சியில் இறங்கினார். மேலும், இந்த படத்தில் தல அஜீத் செம்ம மாஸாக இருக்க போகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்த படத்திற்காக அவர் அதிக உடற்பயிற்சி எடுத்து பிட்னஸ் ஆக இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. மேலும், அவருடைய இந்த புதிய பிட்னஸ் லுக்கை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

இதையும் பாருங்க : முகெனிடம் கேட்ட கேள்வியை டெலீட் செஞ்சிட்டாங்க.! கடைசில பத்திரிகையாளரே ஏமாத்திடீங்களே.!

- Advertisement -

இதுகுறித்து தல 60 படத்தில் அஜித் குமார் கார் ரேஸர் மற்றும் போலீஸ் அதிகாரியாக இருவேடங்களில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது. இந்த படத்திற்கு தல 60 என்று தற்போது பெயர் வைத்து உள்ளார்கள்.மேலும் தல 60 படத்திற்காக அஜித் குமார் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக அழகான தோற்றத்திலும் காட்சியளிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இதற்காக தினமும் 6 மணி நேரம் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறாராம் அஜித். நீண்ட காலத்திற்குப் பிறகு அஜித்தின் தலை முடியை கருமையாகவும், இளமையான தோற்றத்தில் இருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்தன .

Image
Image

கடந்த சில நாட்களுக்கு முன்னர், சமூக வலைதளத்தில் அஜித் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த உடன் தல ரசிகர்கள் தல 60 என்ற ஹாஸ்டேக்கை போட்டு தல கிளம்பிட்டார் என்று பல கருத்துகளை பதிவிட்டும் , மேலும் தல 60 படத்தை குறித்து அப்டேட்களை பதிவிட்டும் வந்திருந்தனர்.

-விளம்பரம்-
Image

இந்த நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் புகைபடங்கள் சமூக வலைதளத்தில் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் உடல் எடையை குறைத்து, கிளீன்சேவ் சேவில் கருப்பு முடியுடன் மீண்டும் இளமையாக காட்சியளிக்கிறார் அஜித். இதனால் தல 60 படத்தில் அஜித் வேற லெவல் கெட்டப்பில் இருப்பார் என்று ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைத்து வருகின்றானர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement