அஜித் ரசிகர்ககளுக்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் – வெளியான அஜித் மற்றும் ஷாலினியின் லேட்டஸ்ட் செல்பி புகைப்படம்.

0
797

தமிழ் சினிமா பிரபலங்களில் புது புதுசா பல தம்பதியர்கள் வந்தாலும் அனைவருக்கும் முதலில் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர்கள் பட்டியலில் சினியர் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் பேபி ஷாலினியாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷாலினி. திருமணத்திற்கு பின்னர் நடிப்பை நிறுத்தி விட்டு குடும்பதத்தை கவனித்து வருகிறார் நடிகை ஷாலினி. கடைசியாக இவர் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர்.

மேலும்,1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த படம் அமர்க்களம். இந்த படத்தில் தான் ஷாலினியும் அஜித்தும் இணைந்து ஜோடியாக நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த படத்தின் போது அஜித் அவர்கள் ஷாலினி இடம் தன்னுடைய காதலை கூறியுள்ளார். அதற்கு ஷாலினி என்னுடைய பெற்றோர்களிடம் பேசுங்கள் என்று சொன்னார். பின் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க : 40 வயதிலும் எல்லை மீறிய கிளாமர் – வெறும் ஓவர் கோட் மட்டும் அணிந்து நடிகை விமலா ராமன் கொடுத்த போஸ்.

- Advertisement -

சமீபத்தில் நடிகர் அஜித் ரைபிள் பயிற்சிக்காக சென்ற போது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. அதே போல நேற்று நடிகர் அஜித் நண்பர்களுடன் சைக்கிள் ரைடிங் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித் மற்றும் ஷாலினி எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் செல்ஃபீ புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

shaliniக்கான பட முடிவுகள்

வலிமை அப்டேட்டை எதிர்பார்த்து கொஞ்சம் சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இப்படி அஜித்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாவது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஷாலினி 20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பட வைரலாக பரவி வருகிறது.அதிலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிகை ஷாலினியை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement