தல அஜித்திடம் இந்த விசயத்தை எப்படி சொல்வது.! தயங்கிய விஸ்வாசம் படக்குழு..!

0
927
ajith

தமிழ் சினிமாவில் தலை என்று அழைக்கபடும் அஜித் சிறந்த நடிகர் என்பதை தாண்டி மிக எளிமையான மனிதர் என்று பலர் கூறி கேட்டுள்ளோம். இவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் நடிகர் அஜித் இன்னும் எளிமையாக தான் இருக்கிறார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது சமீபத்தில் நடந்த சம்பவம்.

ajithsimple

இயக்குனர் சிவா மற்றும் அஜித் 4வது முறையாக இணையும் விசுவாசம் படம் அஜித் ரசிகர்களிடேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த படத்திற்கான ஷூட்டிங் இந்த ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜமௌலி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகளை ராஜமுந்திரியில் சில பகுதிகளை நடத்த இயக்குனர் சிவா முடிவெடுத்துள்ளார். ஆனால், எதிர்பார்த்ததை போன்று ராஜமுந்திரியில் படத்தை எடுக்க முடியவில்லை.

இதனால் படத்தை மீண்டும் ஹைதராபாத்திலேயே தொடர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அஜித்திற்காக ஹைதராபாத்தில் போடப்பட்ட ஹோட்டல் ரூம் தேதிகளை நீட்டிக்க முடியாமல் போய் உள்ளது.அதற்கு தகுந்தார் போல அவர் தங்கியிருந்த ரூமை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முன் பதிவும் செய்திருந்தார், இதனால் அவர் ரூமை காலி செய்ய வேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளது.

simplyajith

இதனால் வேறு ஒரு ரூமையும் புக் செய்யமுடியாமல் இருந்துள்ளது. இந்த பிரச்சனையை அஜித்திடம் சென்று கூறியபோது. அதற்கு அஜித் ‘இப்போ என்ன வேறு ரூம் கிடைக்கவில்லையா, பரவாயில்லை ஒரு சின்ன ரூமும் கூடவே ஒரு ஃபேனும் கொடுங்க போதும்’ என்று கூறியுள்ளார். அஜித்தின் இந்த எளிமையை கண்டு படக்குழு அவர்மீது பெருமிதம் கொண்டுள்ளது.