அஜித் மேனேஜர் என்றும் பாராமல் முரட்டுத்தனமாக நடந்த விஜய் தேவர்கொண்டாவின் அசிஸ்டன்ட். வைரலாகும் வீடியோ.

0
164
suresh
- Advertisement -

விஜய் தேவார்கொண்டாவின் Bodygaurd ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் எண்ணற்ற வேற்று மொழி படங்கள் நேரடியாக டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கில் உருவாகும் படங்கள் நேரடியாக அதே நாளில் தமிழிலும் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ள ‘லைகர்’ திரைப்படம் தமிழ் தெலுங்கு என்று பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

விஜய் தேவர்கொண்டாவின் liger படத்தின் போஸ்டருக்கு நடிகை சமந்தா பதிவிட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவை படு வைரலாகி வருகிறது. டோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் விஜய் தேவர்கொண்டா . தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான். அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் நடிகர் விஜய் தேவர்கொண்டா அவர்கள் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானர்.

- Advertisement -

லைகர் திரைப்படம் :

அதனை அடுத்து இவரது நடிப்பில் வெளியான “கீதா கோவிந்தம்” திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது விஜய் தேவர்கொண்டா நடித்து இருக்கும் படம் ‘liger’. தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் பூரி கனெக்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தைதயாரித்து இருக்கிறது. இந்த படத்தை பூரி ஜெகன்னாத் இயக்கி இருக்கிறார். லைகர் படத்தில் சர்வதேச புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரான மைக் டைசனும் இந்த படத்தில் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

சென்னையில் நடைபெற்ற Promotion :

இந்தத் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமஷன் பணிகளில் தீவிரமாக பட குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லைகர் படக்குழு சென்னை வந்து இருந்தனர். இந்த சந்திப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் விஜய் தேவர்கொண்டாவை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ரசிகர்களை அடித்த bodyguard :

விஜய் தேவர் கொண்ட அரங்கிற்குள் வரும்போது அவருடன் இருந்த பாதுகாவலர் ஒருவர் விஜய் தேவர்கொண்டாவை யாரும் நெருங்காத வகையில் ரசிகர்களை தள்ளிவிட்டு கொண்டு வந்தார். அத்தோடு மட்டும் நிறுத்தாமல் ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகரை ஓங்கி அடித்து இருந்தார் உடன் வந்த அந்த பாதுகாவலர். விஜய் தேவரகொண்டாவுடன் வந்த அந்த ஒரு நபர் மட்டும் தான் ரசிகர்கள் இடம் படு ஆவேசமாக நடந்து கொண்டார்.

அஜித் மேனஜர் :

மேலும் மேடையில் விஜய் தேவர் கொண்டா உடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவரது சட்டையை பிடித்து வேகமாக தள்ளிவிட்டார் அந்த பாடிகார்ட். அப்போது அருகில் இருந்த டிடியின் கையில் அடி விழ ஒரு கணம் வலியால் துடித்தார் டிடி. அதே போல அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமும் அந்த நபர் கடுமையாக நடந்துகொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர விஜய் தேவர் கொண்டாவின் அந்த பாடி கார்டை வளரும் திட்டத் தீர்த்து வருகிறார்கள்.

Advertisement