அடுத்தடுத்த அப்டேட்டுகள்,வதந்திகள் குறித்து அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி, தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக அஜித் அவர்கள் திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருக்கிறார். இதை அடுத்து அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து அஜித் அவர்கள் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார், அஜித் ஆபரேஷன் செய்து ஓய்வு எடுக்க போகிறார் என்றெல்லாம் இணையத்தில் செய்தி வைரலாகி இருந்தது. இது எந்த அளவிற்கு உண்மை என்றும் தெரியவில்லை. இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அஜித் நண்பர்,மேலாளர் சுரேஷ் சந்திரா அளித்த பேட்டியில், அஜித் சாரை பொறுத்தவரை அவரிடம் ஒரு தயாரிப்பு நிறுவனம் வந்துவிட்டால் உடனே ஓகே சொல்ல மாட்டார். காரணம், அவர்களுக்கு முன்னர் அவர் வாக்கு கொடுத்திருக்கும் நிறுவனத்தின் கமிட்மென்ட் எல்லாம் முடித்து விட்டு தான் இன்னொரு கம்பெனிக்கு வருவார்.
சுரேஷ் சந்திரா பேட்டி :
லைக்கா நிறுவனத்திடம் சார் பல வருஷமாக தொடர்பில் இருக்கிறார். அதற்கு பிறகு அவர்களுக்கு ஒரு படம் பண்ணலாம் என்று சார் முடிவெடுத்தார். முதலில் ஒரு இயக்குனர் கமிட் ஆனார். அவர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் வேறு இயக்குனர் வந்தார். இருந்தாலுமே அஜித் சாருக்கு ஆன கதையை ரெடி பண்ண வேண்டும். இந்த குறிப்பிட்ட கால அவகாசத்தில் லைக்காவுக்கு வேறு சில கமிட்மென்ட் இருந்தது. இதெல்லாமே எல்லோருக்கும் தெரியும் அதற்கு பிறகு தான் அஸர்பைஜான் போன இடத்தில் பல ப்ரச்சனை. அந்த லொகேஷனில் வெயில் சில மணி நேரம் வரும்.

விடாமுயற்சி அப்டேட் :
நம்ப ஊரில் காலையில் வெயில் தொடங்கி மாலை வரை இருக்கும். ஆனால், அங்கு வெறும் நாலு மணி நேரம் தான் வெயில் அடிக்கும். அந்த நேரத்திற்குள் சூட் முடித்தாக வேண்டும். இருந்தும் அங்கேயே 70% படப்பிடிப்பை முடித்துவிட்டோம். இந்த நேரத்தில் தான் லைகாவுக்கு லால் சலாம், இந்தியன் 2 படத்தோட ரிலீசில் கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் போது நடிகர்களோட தேதிகள் கிடைக்கவில்லை. இதை எல்லாம் நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை. விடாமுயற்சி கமிட் ஆகும் போது இந்த படம் கடந்த பிப்ரவரி மாதமே படப்பிடிப்பு முடிந்துவிட்டு, ஒரு சில மாதம் ஓய்வு எடுத்து அடுத்த படத்துக்கு போகலாம் என்று இருந்தது. ஆனால் இப்படி தாமதம் ஆனதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்ல.

அஜித் படங்கள் அப்டேட் :
இருந்தாலுமே இன்னொரு படத்தில் நடிக்க அஜித் சார் ஒப்புக்கொண்டதால் அதோட படப்பிடிப்பையும் உடனே ஆரம்பிக்க வேண்டியதாகி விட்டது. கடந்த ஐந்தாம் தேதியில் இருந்து அஜித் சார் ஒரு நாளைக்கு 21 மணி நேரம் உழைக்கிறார். விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் ஒரே சமயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் இந்த மாதிரி நான்கு நாள் சூட்டிங் போக இருக்கிறது. அதோடு 20 வருடங்களுக்கு பின் அஜித் சார் இப்படி செய்கிறார். மேலும், இவர் இப்படி கஷ்டப்பட்டு உழைப்பதற்கு காரணம் படத்தை எப்படியாவது முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கமிட்மென்ட் தான். அவருடைய கவனம் முழுவதுமே இந்த இரண்டு படங்களை முடித்துக் கொடுப்பதில் தான் இருக்கிறது.

அஜித் உடல்நிலை குறித்து சொன்னது :
இந்த சமயத்தில் அவர் மூன்றாவது படத்தை பற்றி நினைப்பது சாத்தியமே கிடையாது. அது அடுத்த ஆண்டு மே மாதம் கூட நடக்கலாம். இதற்கிடையில் அவருக்கு மூளையில் இரத்தக்கட்டி இருக்கு, ஆப்ரேஷன் பண்ணனும் என்ற செய்திகள் எல்லாம் வெளியாகியிருக்கு. அதெல்லாம் பொய். அவருக்கு ஒரு சின்ன மைனராக விஷயம் தான். முன்னாடி நடித்த ஒரு படத்தோட ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தால் தான் இப்ப அவருக்கு பிரச்சனை வந்தது. அவருக்கு மூன்று வாரம் ஓய்வு கொடுக்கணும் என்று சொன்னார்கள். ஆனால், அவர் 10 நாளிலேயே மருத்துவமனையில் இருந்து பைக்கை எடுத்துக்கொண்டு சூட்டிங் வந்துவிட்டார். மேலும், அஜித் சார் சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. இவை வெறும் வார்த்தை கிடையாது. அவருடைய அனுபவம், அதுதான் உண்மை என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.






