மீண்டும் அஜித்தின் மங்காத்தாவா.! பிரபல இயக்குனரின் டீவீட்டால் குஷியான ரசிகர்கள்.!

0
1918
Mankatha
- Advertisement -

அஜித்தின் திரைப்பட வாழ்க்கையில் மாபெரும் ஹிட் படங்களின் வரிசையில் ‘மங்காத்தா’ படத்திற்கும் ஒரு முக்கிய இடம் இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2011 ஆம் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆண்ட்ரியா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படத்தில் அஜித் வித்யாசமான ஹீரோ, வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி இருப்பார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வந்து விடாதா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படியுங்க : மங்காத்தா 2..வெங்கட் பிரபு வெளியிட்ட சூப்பர் தகவல்.! தல நீங்க ரெடியா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! 

- Advertisement -

Read more at: https://tamil.behindtalkies.com/venkat-prabhu-mangatha-update/

இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இந்த படம் மீண்டும் திரைக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று சிம்புவின் ‘AAA ‘ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை பிரபல தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்ப அந்த புகைப்படத்தை வெளியிட்டு இந்த படம் ரி- ரிலீஸ் ஆனால் எப்படி இருக்கும் என AAA பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் ட்வீட் செய்து ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்

Advertisement