மங்காத்தா 2..வெங்கட் பிரபு வெளியிட்ட சூப்பர் தகவல்.! தல நீங்க ரெடியா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

0
456
mangatha
mangatha

அல்டிமேட் ஸ்டார் அஜித் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “மங்காத்தா” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படம் வெளியாகி நேற்றோடு 7 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.

இந்த படத்தில் அஜித் ஒரு வில்லன் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார். நீண்ட வருடங்களாக ஒரு ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருந்த நடிகர் அஜித்திற்க்கு “மங்காத்தா” படம் ஒரு மாபெரும் திருப்புமுனை படமாகவே அமைந்தது என்றே கூறலாம்.

அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற ஹீரோகளின் ரசிகர்கள் கூட இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று நீண்ட வருடங்களாக இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் வேண்டுகளை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 31) தனது ட்விட்டர் பக்கத்தில் மங்காத்தா 2 பாகத்தை குறித்து பதிவிட்டிருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு.

mangatha

அந்த பதிவில் “ஹாப்பி மங்காத்தா டே தல ரசிகர்களே. நீங்கள் என்ன கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்று தெரியும். அதற்கு என்னுடைய பதில் தல தான் சொல்லணும் “என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவி கண்ட ரசிகர்களும் மிகவும் ஆவலுடன் மங்காத்தா 2 வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக அஜித் ஒப்புக்கொள்வர் என்று பதிவிட்டு வருகின்றனர்.