புதிய தொழிலை ஆரம்பித்த நேர்கொண்ட பார்வை பட நடிகை.

0
1447
shradha
- Advertisement -

பெரும்பாலும் நடிகைகள் தங்களுடைய சம்பாத்தியத்தை முழுவதும் சொத்துக்கள் ஆகவும், ரியல் எஸ்டேட் மீதும் முதலீடு செய்வார்கள். அதோடு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை வாடகைக்கு வாங்கி விடுகிறார்கள். நகை கடை, திருமண மண்டபம் என்று பல வகைகளில் தங்களுடைய முதலீடுகளை போட்டு தொழில் நடத்தி வருகிறார்கள். இந்த வரிசையில் தற்போது நடிகர் ஸ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்து உள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

-விளம்பரம்-

நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இவன் தந்திரம் என்ற படத்தின் மூலம் தான் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா, அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டான நேர்கொண்ட பார்வை ஆகிய பல படங்களில் நடித்து பிரபலமானர் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழி திரையுலகிலும் கலக்கி வருகிறார். தற்போது இவர் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக சக்ரா படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் தற்போது தொழிலதிபராக அவதாரம் எடுத்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. சென்னை வேளச்சேரியில் மாலில் ஹோட்டல்( ‛பெர்சி’ என்ற பெயரில் கபே) ஒன்றை நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் திறந்து உள்ளார். இவர் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எனது ஓட்டல் சிறியதாக இருந்தாலும் கண்டிப்பாக நல்ல உணவு எங்கே கிடைக்கும். இந்த கபே ரெஸ்டாரண்ட்களை விட சிறியது, மற்ற கபேக்களை விட கொஞ்சம் பெரியது.

மேலும், இவர் ஹோட்டல் திறந்து உள்ள தகவலை அறிந்த ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் சோசியல் மீடியாவில் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எளிமையான நிறைய நல்ல மற்றும் புதிய உணவுகள் இங்கு கிடைக்கும். உணவுடன் சிறந்த உறவை நோக்கிய எனது பயணத்தில் சுத்தமான, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு படி நெருக்கமாக இருக்கிறது. இது என் இதயத்திற்கு நெருக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. கபேயை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement