அஜித்தை போல பைக் ஓட்ட நினைத்து விழுந்து வாரிய அஜித் பட நடிகை – வைரலாகும் வீடியோ.

0
6428
shradha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த இவன் தந்திரம் என்ற படத்தின் மூலம் தான் ஸ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் விக்ரம் வேதா, காற்றுவெளியிடை போன்ற பல படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு தல அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இந்த படம் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதனை தொடர்ந்து இவர் கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அவர்கள் பைக் ஓட்ட தெரியாமல் கீழே விழுந்த நிகழ்வை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியது, கடந்த 2017ம் ஆண்டு நந்தி ஹீல்ஸில் நடைபெற்ற ஒரு ஷூட்டிங்கில் போல்டான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதால் புல்லட் ஓட்ட தெரியுமா என கேட்டனர். அதற்கு நான் ஸ்ட்ரெய்ட்டா எனக்குத் தெரியாது எனக் கூறினேன். ஆனால், பைக் எப்படி ஓட்டுவது என்ற பயிற்சி எனக்கு சொல்லி கொடுத்தார்கள்.

- Advertisement -

பின்னர் நான் பைக்கை ஓட்டும் போது எப்படி விழுந்தேன் என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்திய சினிமாவில் போல்டான பெண் என்றால் பைக் ஓட்ட வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இதில் கொடுமை என்னவென்றால் அந்த புல்லட்டில் இருந்து நான் கீழே விழுந்த போது என்னை யாரும் கண்டு கொள்ளவில்லை. புல்லட்டுக்கு எந்த சேதமும் ஆகவில்லையா என்பதை தான் அனைவரும் பார்த்தார்கள். ராயல் என்ஃபீல்டு ஏன் இவ்வளவு வெயிட்டாக இருக்கு என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த கோமாளி நடிகை சம்யுக்தா சூப்பர் என்று கமெண்டில் போட்டு
உள்ளார்.

தற்போது இவர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் சக்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் அந்த படத்தில் இருந்து சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இவர் மீண்டும் மாதவனுக்கு ஜோடியாக ‘மாறா’ என்ற படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான துல்கர் சல்மானின் சார்லி படத்தின் தமிழ் ரீமேக் தான் மாறா படம்.

-விளம்பரம்-
Advertisement