விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி 16 நாளில் அமேசான் பிரைமைல் வெளியானது. மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் 4.50 நிமிட டெலீடட் வீடியோவை அமேசான் நிறுவனம் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 6) வெளியிட்டது. ஏற்கனவே படத்தின் நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்ததால் பல காட்சிகளை கட் செய்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவில் சவிதாவிடம் (கௌரி கிஷன்) தவறாக நடந்து கொண்டதால் இரண்டு இளைஞ்சர்களை விஜய் அடித்து இருந்ததால் விஜய்யை கல்லூரி நிர்வாகம் அழைத்து கண்டிக்கும்.
அப்போது பெண்களை ஆண்களோடு பழக விடுவதாலும் பெண்கள் அவர்கள் இஷ்டத்துக்கு ஆடை அணிவதாலும் தான் அவர்கள் சவிதாவை அப்படி செய்தார்கள் என்று ஒரு ஆசிரியை கூற, அதற்கு விஜய் பெண்கள் அணியும் ஆடையை குறை சொல்லும் முன் ஆண்களுக்கு எப்படி ஒரு பெண்ணை தொட வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள் என்று அறிவுறுத்துவார்.ஆடை பெயரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்து மீறல்களை பற்றி சொன்ன இந்த காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் பாருங்க : ரெண்டு வாரத்தில் 2 இன்ச் கொறச்சிட்டேன் – ரம்யா பகிர்ந்த புகைப்படத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள். நீங்களே பாருங்க ஏன்னு ?
இப்படி ஒரு நிலையில் இந்த காட்சி நீக்கப்பட்டது குறித்து இந்த காட்சியில் நடித்துள்ள விஸ்வாசம் பட நடிகை ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். இந்த காட்சியில் கௌரியிடம் தவறாக நடந்து கொண்ட அந்த மாணவரின் அம்மாவாக நடித்தவர் சுரேகா வாணி. தெய்வ திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்த சுரேகா வாணி ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். தமிழில் வெளியான உத்தம புத்திரன் படத்திற்கு பின்னர், ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துளளார்.
ஆனால், இவர் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது இந்த டெலீடட் வீடியோ வெளியான பின்னர் தான் தெரிந்தது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுரேகா, இந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இந்த வாய்பை கொடுத்த லோகேஷ் கனகராஜிற்கு நன்றி, சூப்பர் ஸ்டார் விஜயுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார்.