பைக் விபத்தினால் விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த அஜித். எந்த படம் தெரியுமா ?

0
3564
Vikram-Ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற பல இயக்குனர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் தனெக்கென ஒரு தனித்துவம் கொண்டு கதை இயக்குவார்கள். அதில் சில இயக்குனர்களே பெரிய அளவு மக்களிடையில் பேசப்படுகிறார்கள். அவர் அந்த வகையில் மக்களிடையே மிக பிரபலமான இயக்குனர் விக்ரமன். இவருடைய படங்கள் எப்போதும் பிரம்மாண்டம் கிடையாது, அதிக பொருட்செலவு கிடையாது, மாஸ் ஹீரோ கிடையாது இருந்தாலும் இவருடைய படங்கள் எப்போதும் வெள்ளி விழாவைக் கொண்டாடும் அளவுக்கு வெற்றி கொடுக்கும். தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் எல்லாம் முதலில் இவர் இயக்கிய படத்தின் மூலம் பிரபலமானவர்கள். மேலும், இவர்கள் எல்லாம் இந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருப்பதற்கு காரணம் இயக்குனர் விக்ரமன் இயக்கிய படங்கள் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களும் பார்த்து மகிழும் வகையில் இவருடைய படம் இருக்கும்.

-விளம்பரம்-
Image result for ajith bike accident

- Advertisement -

இயக்குனர் விக்ரமன் படம் என்றாலே அதற்கென ஒரு தனி பட்டாளமே உள்ளது. அதோடு இயக்குனர் விக்ரமன் இயக்கிய படங்களில் பார்க்க நம்பி செல்லலாம் என்றும் சொல்வார்கள். இவருடைய முதல் படம் புதுவந்தம். மேலும், இவருடைய முதல் படத்திலேயே மிகப் பெரிய அளவில் வெற்றி கிடைத்தது. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதுமட்டும் இல்லாமல் வெள்ளி விழாவையும் கொண்டாடியது. இயக்குனர் விக்ரமன் அவர்கள் இன்றைய முன்னணி நடிகர்களை வைத்து அப்போது பல படங்களை இயக்கி உள்ளார். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் தான் நம்ப தல அஜித். நடிகர் அஜித் அவர்கள் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆகவும், உச்ச நட்சத்திரமாகவும் திகழ்பவர். இவர் இந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருக்க காரணமானவர் இயக்குனர் விக்ரமன்.

இதையும் பாருங்க : மோனல் காதலித்தது குணாலை இல்லை, இவரை தான். கலா மாஸ்டருக்கும் மும்தாஜுக்கும் மோனல் தற்கொலையில் என்ன தொடர்பு ?

மேலும், விக்ரமன் இயக்கிய “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் ” என்ற படத்தின் மூலம் தான் அஜீத் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதோடு இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்தின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கூட சொல்லலாம். மேலும், இந்த படம் வெற்றி விழாவை கொண்டாடிய படம் ஆகும். 1994 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புதிய மன்னர்கள்’. இந்த படத்தில் விக்ரம்,விவேக், சீமன், தாமு, பிரித்விராஜ், பாபு கணேஷ் உள்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க மாணவர்களின் அரசியல் புரட்சியை மையமாக கொண்ட கதை ஆகும். இருந்தாலும் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால், ஏ ஆர் ரகுமானின் இசையில் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வேற லெவல் இருந்தது.

-விளம்பரம்-
Related image

தற்போது கூட இந்த படத்தின் பாடல்களை விரும்பிக் கேட்கும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பாபு கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் தல அஜித் அவர்கள் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்று தெரியவந்து உள்ளது. ஆனால், அப்போது நடிகர் அஜித்துக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விபத்து ஏற்பட்டு இருந்ததால் பல மாதங்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். பின் இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் அஜித்தின் கதாபாத்திரத்தில் நடிகர் பாபு கணேஸை வைத்து நடிக்க இயக்குனர் விக்ரமன் முடிவு செய்தார். இயக்குனர் விக்ரமன் அவர்கள் நான்கு வருடங்கள் கழித்து தான் அஜித்தை வைத்து “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” திரைப்படத்தை இயக்கினார். அதே போல விக்ரமுடன் உல்லாசம் படத்தில் இணைந்து நடித்தார் அஜித்

Advertisement