அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது. பற்றி எரியும் பிரச்சனை குறித்து கார்த்திக் சுப்புராஜ் போட்ட ட்வீட்.

0
2256
Karthik-Subburaj
- Advertisement -

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி. இதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் கொந்தளிப்பு. குடியுரிமை சட்ட திருத்தம் கண்டித்து பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் தீவிர போராட்டம். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் நிறைவேற்றியது. இதை தொடர்ந்து நாடு முழுவதும் பல இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடை பெற்று வருகின்றது. பின் வட மாநிலங்கள் முழுவதும் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிராக டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்கள். அவர்களின் போராட்டம் தீவிரமாக மாறியது.

-விளம்பரம்-
Image result for குடியுரிமை சட்ட திருத்த மசோதா

- Advertisement -

போராட்டத்தினால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டதாக கூறி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் குற்றம் சாட்டினார்கள். ஆனால், மாணவர்கள் அந்த மாதிரி எதுவும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்தார்கள். இருந்தாலும், போலீசார் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி பல்கலைக்கழகத்தில் புகுந்து மாணவர்களை தாக்கினார்கள். பின் கல்லூரி வளாகத்தை பயங்கரமாக சிதைத்தார்கள். மேலும், கல்லூரி மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மிகப் பெரிய மோதல் ஏற்பட்டது. பின் ஜாமியா பல்கலைகழக மாணவர்களை மீது வன்முறையாக போலீசார் தடியடி செய்து தாக்கினார்கள். அதோடு பல மாணவர்களை கைதும் செய்தார்கள்.

இதையும் பாருங்க : பைக் விபத்தினால் விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த அஜித். எந்த படம் தெரியுமா ?

இதனால் லக்னோ உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. இதனால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். தமிழ்நாட்டில் கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்தும், போலீசுக்கு கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இதனை தொடர்ந்து கல்லுரிகளுக்கு எல்லாம் விடுமுறை அளித்து உள்ளார்கள். மேலும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக பல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இந்த எதிர்ப்பு குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த ‘பேட்ட’ படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து கடுமையாக கண்டித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் சிட்டீஸன்ஷிப் அமெண்ட்மெண்ட் ஆக்ட்( Citizenship Amendment Act ) குறித்து தன்னுடைய கடுமையான எதிர்ப்பை ட்விட்டரில் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியது, “இந்த பூமி எவனுக்கும் சொந்தம் கிடையாது, அவன் அப்பன் வீட்டு சொத்தும் கிடையாது” என்று கடும் சினம் கொண்டு அவர் கூறி உள்ளார். இந்த மாதிரி நாடு முழுவதும் நடக்கும் தீவிர போராட்டம் குறித்து மோடி அவர்கள் ட்விட்டரில் கூறியது, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வன்முறைப் போராட்டங்கள் எல்லாம் தேவையில்லாதவை. இந்த போராட்டம் ஆழமான வருத்தத்தை தருகிறது. இதனால் மக்களும், இந்திய அரசாங்கமும் தான் மிகவும் பாதிக்கப்படுகிறது.

பொது சொத்துக்கு சேதம் விளைவித்தால் சகஜ வாழ்க்கை தான் கெட்டுப்போகும் என்று கூறி உள்ளார். உண்மையிலேயே பேருந்துகளுக்கு போலீசாரே தீ வைத்து அதை மாணவர்கள் மீது வழக்கு தொடுத்து தடி அடியை நடத்தி வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்திய நாடு பெரும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. அது மட்டுமில்லாமல் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் போராட்டமும் நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டு இருக்கிறது. இதற்கு அரசாங்கம் என்ன ஒரு முடிவு கொண்டு வரப் போகிறதோ????

Advertisement