முன்னாள் காதலியை பார்க்க 3500km கார் ஓட்டி சென்ற அவன் இவன் ஹைனஸ். இவரது மனைவி எந்த நடிகை தெரியுமா?

0
179
- Advertisement -

தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கிலோ மீட்டர் பயணம் செய்ததாக அவன் இவன் பட நடிகர் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஜி எம் குமார். இயக்குனர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் கொடுத்த படம் அவன் இவன். இந்த படத்தில் விஷால், ஆர்யா, ஜனனி ஐயர், மதுஷாலினி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாபாத்திரத்தில் ஜிஎம் குமார் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கிலோ மீட்டர் பயணம் செய்ததாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ஜி.எம். குமார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘ எனது முன்னாள் காதலியை பார்க்க 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் ஓட்டிச் சென்றேன் மெட்ராஸ் பெங்களூரு கோவா பாம்பே மெட்ராஸ் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் என்ன இன்ஸிபிரஷன் சார்.ஆனால்,கோவாவா அல்லது எக்ஸ்ஸா என்று கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

இதற்கு ஜி.எம்.குமார் ‘ கடந்த 30 வருடங்களாக பாம்பேவிற்கு டிரைவிங் செய்து போய் வருவேன் நான் அவளுடன் டிரைவிங் போவேன் ஆனால் இப்போது விதி மாறிவிட்டது அவளைப் பார்க்க தனியாக சென்றேன் என்று பதில் அளித்து இருக்கிறார். இவரின் இந்த பதிவை கண்ட பலர் வாரணம் ஆயிரம் சூர்யாவையே மிஞ்சிடீங்க என்று கமண்ட் செய்து வருகின்றனர். இவருடைய முழு பெயர் கோவிந்தராஜ் மனோகரன் குமார்.

இவர் சென்னையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர். 1986 ஆம் ஆண்டு சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்த அறுவடை நாள் என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து இவர் பிட்பாக்கெட், இரும்பு பூக்கள், உருவம் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

பின் இவர் 1993 ஆம் ஆண்டு கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக ஆனார். அதன் பின் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், இவர் இயக்கி, தயாரித்த பல படங்கள் தோல்வியைத் தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தி இருந்தது.இதனால், இவர் சிலகாலம் சினிமா பக்கமே வராமல் இருந்தார். பின் வெயில் படம் இவருடைய சினிமாவிற்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது.

அதற்கு பின் தொடர்ந்து இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தன் முதல் படத்தில் நடித்த நடிகை பல்லவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை பல்லவியும் 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். சொல்லப்போனால் அப்போது இருந்த ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகையாக இருந்தார் பல்லவி. அதற்குப் பின் இவர் சினிமாவில் அவ்வளவாக நடிக்கவில்லை.

Advertisement