படம் தோல்வியடைந்தால் நான் பொறுப்பில்லை. இணையத்தில் வைரலாகும் அஜித்தின் பழைய வீடியோ.

0
10947
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்ற அந்தஸ்துடன் முன்னை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது இருக்கும் நடிகர்களில் விஜய்க்கு நிகராக இருந்தாலும் நடிகர் அஜித் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரசிகர் மன்றங்களை களைத்து விட்டார். மேலும், மற்ற நடிகர்களை போல நடிகர் அஜித், பொது நிகழ்ச்சிகளிலோ, விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலோ, பேட்டிகளிலோ பங்கேற்று பல வருடங்கள் ஆகிவிட்டது.இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அஜித் சன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

வீடியோவில் 1 : 44 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

அந்த பேட்டியின் போது அஜித்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது, அதில் தற்போது 1997 ஆம் ஆண்டில் உங்களுடைய நடிப்பு நன்றாக இருந்தும் படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை, அதற்கு காரணம் நீங்கள் சரியாக படத்தின் கதைகளை கேட்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது அது உண்மையா அது என்று கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதில் அளித்த அஜித், அப்படி பார்த்தல் 96 ல் ரிலீஸ் ஆன படங்கள் வான்மதி, கல்லூரி வாசல்,மைனர் மாப்பிள்ளை காதல் கோட்டை ஆகிய படங்கள் கதை கேட்காமல் தான் நான் ஒப்புக் கொண்டேன்.

இதையும் பாருங்க : 3 ஆண்டுகளாக சினிமாவில் தலை காண்பிக்காமல் இருந்த லட்சுமி மேனனா இது. லேட்டஸ்ட் வீடியோ இதோ.

-விளம்பரம்-

சினிமாவை பொறுத்த வரை நான் ஒரு நடிகன், கதை கேட்டு ஓரு இயக்குனரிடம் திருத்தும் சொல்லும் ஒரு அருகதை இருந்திருந்தால் நான் நடிகராக வந்திருக்க மாட்டேன் ஒரு இயக்குனராக மாறி இருப்பேன். படத்தின் கதையில் கவனம் செலுத்துவது ஒரு இயக்குனருடைய பொறுப்பு. ஒரு படம் வெற்றி அடைந்தாள் மட்டும் அது இயக்குனரின் பொறுப்பு என்கிறீர்கள். ஆனால், தோல்வியடைந்தால் மட்டும் எப்படி நடிகரின் பொறுப்பாக முடியும் அது என்னுடைய தவறு இல்லை இயக்குனருடைய தவறு.

இரண்டரை கோடி செலவு செய்யும் ஒரு தயாரிப்பாளர் அவர் கதையை கேட்டு தானே படத்தை ஓகே செய்து இருப்பார். கடந்த ஆண்டு 97 ல் வந்து நேசம், ராசி, உல்லாசம், ரெட்டை ஜடை வயசு, பகைவன் போன்ற 5 படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் ? கதை கேட்காமல் இருப்பது என்னுடைய தவறு என்றால், கதை கேட்டு அதை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளருக்கும் அதே பொறுப்பு இருக்கிறது அல்லவா, எனவே, அது என்னுடைய பொறுப்பு மட்டும் இல்லை என்று கூறியுள்ளார்.

Advertisement