ஸ்ரீ தேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு திதியில் பங்கேற்ற அஜித். வைரலாகும் வீடியோ.

0
8011

தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி. இவர் கோலிவுட்டில் முடி சூடா ராணியாக திகழ்ந்து வந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து மாபெரும் நடிகையாக திகழ்ந்து வந்தார். இவர் 1976 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த மூன்று முடிச்சு படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ கொடுத்தார்கள். 1996 ஆம் ஆண்டு ஸ்ரீதேவிக்கும் இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது.

ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி துபாய் சென்று இருந்தார். பின் திடீரென்று நடிகை ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவருடைய இழப்பு ஒட்டு மொத்த இந்திய திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி நடந்தது. சென்னை சி.ஐ.டி. நகரில் ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது.

- Advertisement -

இதில் போனி கபூரின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் அஜித்தும் கலந்து கொண்டார். ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தில் அஜித் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். மேலும், கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்திருந்தார். தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள். மேலும், படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. இந்த வலிமை படத்தில் அஜித் அவர்கள் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். படத்தின் வேலைகள் எல்லாம் மும்முரமாக போய் கொண்டு உள்ளது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement